2025 ஜூலை 16, புதன்கிழமை

வேட்டையாடப்பட்ட இறைச்சி வைத்திருந்தவருக்கு ரூ.220,000 அபராதம்

George   / 2015 பெப்ரவரி 01 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

வேட்டையாடப்பட்ட இறைச்சியை தமவசம் வைத்திருந்ததாக கூறப்படும் ஹோட்டல் முகாமையாளருக்கு, திஸ்ஸமகாராம மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் காமினி ஆனந்த, இரண்டு இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.
 

குறித்த ஹோட்டல் முகாமையாளர் வசமிருந்து,  வேட்டையாடப்பட்ட மிருகங்களின் 200 கிலோகிராம் இறைச்சி, ஹம்பாந்தோட்டை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

வனஜீவராசி திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, குறித்த ஹோட்டல் முகாமையாளர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .