Super User / 2011 மார்ச் 28 , பி.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் 2 ஆம் திகதி மும்பையில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப்போட்டியை பார்வையிடுவதற்கு ஐ.சி.சி. தலைவருக்கான பகுதியில் 30 ஆசனங்களை ஒதுக்கித் தருமாறு இலங்கை ஜனாதிபதியின் அலுவலகங்கள் கோரியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை அணி அரையிறுதிப்போட்டிக்கு தெரிவாகி, இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் வாய்ப்பை கொண்டிருக்கும் நிலையில் சரத் பவாரிடம் இலங்கை அரசாங்கத்தினால் இக்கோரிக்கை விடுக்கப்பட்டதாக தம்மை இனங்காட்ட விரும்பாத இந்திய கிரிக்கெட் சபை உத்தியோகஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
"இலங்கை ஜனாதிபதி 30 பேர் கொண்ட குழுவுடன் போட்டியை பார்வையிட வரக்கூடும். 200 ஆசனங்கள் கொண்ட ஐ.சி.சி. தலைவருக்கான பகுதியில் அக்குழுவுக்கு ஆசனங்கள் ஒதுக்கப்படும். இந்திய அணி இறுதிப்போட்டிக்குத் தெரிவானால் பிரமுகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அப்போது உள்ளூர் கோரிக்கைகளை பூர்த்தி செய்வது கடினமானதாக இருக்கும்" என மேற்படி உத்தியோகஸ்தர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .