2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

'சனல் 4 வீடியோ தொகுப்பு' வெளியிடப்படவிருக்கிறது; ஐ.நா அறிவிப்பு

Super User   / 2010 ஜனவரி 07 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

'சனல் 4 வீடியோத் தொகுப்புத்'  தொடர்பான நம்பத்தகுந்த ஆய்வு அறிக்கையை  ஐக்கிய நாடுகளின் இணைப்பாளர் பிலிப் அல்ஸ்டன் வெளியிடவிருப்பதாக  ஐக்கிய நாடுகள் சபை இன்று அறிவித்துள்ளது.

இதேவேளை, ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான்கீமூன்,  இந்த மாத இறுதிக்குள் நலன்புரி நிலையங்களிலிருக்கும் மக்கள் அவர்களின் சொந்த இடங்களிலோ  அல்லது வேறிடங்களிலோ மீள்குடியேற்றப்படுவார்களென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உறுதியளித்திருப்பதாகவும்  தெரிவித்தார்.

இடம்பெயர்ந்திருக்கும் மக்கள் மீள்குடியேற்றப்படுவது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடியதாகவும் அவர் கூறினார். இந்த நிலையில், இலங்கை அரசாங்கம் தனது உறுதிமொழியைக் காப்பாற்றுமென நம்புவதாகவும் பான்கீமூன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .