2021 ஜூன் 16, புதன்கிழமை

ஆஸ்திரேலியாவில் 45 தமிழர்கள் தஞ்சம்

Super User   / 2010 பெப்ரவரி 07 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையிலிருந்து அரசியல் புகலிடம் கோரிச் சென்ற 45 தமிழர்கள் ஆஸ்திரேலியா, கிறிஸ்மஸ் தீவுக்கு அருகிலுள்ள கடற்பரப்பில்  நேற்று காப்பாற்றப்பட்டிருப்பதாக ஆஸ்திரேலிய அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த 45 பேரும் கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும் ஆஸ்திரேலிய அகதிகளுக்கான அமைப்பின் பேச்சாளர் ஐயன் றின்ருயுல் கூறினார்.

இலங்கையிலிருந்து கடந்த ஜனவரி மாதம் 20ஆம் திகதி குறித்த படகில்  புறப்பட்ட இவர்கள், படகில் எரிபொருள் முடிவடைந்த நிலையில் கடற்பரப்பில் தத்தளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவர்கள் கடந்த 4 நாள்களாக தண்ணீர், உணவு ஆகியனவின்றிக் காணப்பட்டதுடன், பெரும்பாலானோர் நோய்வாய்ப்பட்டிருந்ததாகவும்  ஆஸ்திரேலிய அகதிகளுக்கான அமைப்பின் பேச்சாளர் தெரிவித்தார்.   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .