2021 ஜூன் 14, திங்கட்கிழமை

47 இலங்கை தமிழ் அகதிகள் அவுஸ்திரேலிய,ரொமேனிய நாடுகளில் தஞ்சம்

Super User   / 2009 டிசெம்பர் 29 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் புகலிடம் கோரிச் சென்ற 78 இலங்கைத் தமிழர்களில் 47 பேர் அவுஸ்திரேலியாவுக்கும், ரொமேனியாவுக்கும் குடியேறச் சென்றிருப்பதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் இந்த 78 பேரும் அவுஸ்திரேலிய சுங்க அதிகாரிகளால் காப்பற்றப்பட்டிருந்ததாக இந்தோனேசிய மேல்மாகாணசபையின் சட்டம், மனித உரிமைகள் ஆகியவற்றுக்கான தலைவர் ஐ.விதியார்தா கூறினார்.

இந்த நிலையில், அவுஸ்திரேலியா 31 பேரையும், ரொமேனியா 16 பேரையும் ஏற்றுக்கொண்டிருப்பதாகவும்  அவர் குறிப்பிட்டார். அத்துடன், இந்த மாத முற்பகுதியில் 15 தமிழர்கள் அவுஸ்திரேலியாவிலும், கனடாவிலும் குடியேற்றப்பட்டிருப்பதாகவும் ஐ.விதியார்தா தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .