2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

மேலும் 5 ஐ.தே.க. எம்.பிகள் அரசுக்கு ஆதரவளிப்பர் : ஏர்ல் குணசேகர

Super User   / 2010 செப்டெம்பர் 06 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

(இந்திக்க ஸ்ரீ அரவிந்த)

ஐ.தே.கவிலிருந்து மேலும் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிப்பர் என ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஏர்ல் குணசேகர தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே ஏர்ல் குணசேகர, லக்ஸ்மன் செனவிரட்ன, மனூஷ நாணயக்கார ஆகிய ஐ.தே.க. எம்.பிகள் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாக  அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலும் மேலும் 5 எம்.பிகளின் ஆதரவைப் பெறுவதற்காக இரகசிய சந்திப்பொன்று நடைபெற்றுள்ளதாகவும் நாளை மறுதினம் புதன்கிழமை வாக்கெடுப்பின் பின் அவர்கள்  கூட்டாக செய்தியாளர் மாநாடொன்று நடத்தப்படும் எனவும் ஏர்ல் குணசேகர எம்.பி. கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .