2026 மார்ச் 18, புதன்கிழமை

7 நாட்கள் பூட்டப்படும் மதுபான நிலையங்கள்

J.A. George   / 2024 ஜூன் 04 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் சில பகுதிகளில் உள்ள  மதுபானசாலைகளை 7 நாட்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூன் மாதம் 18ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை  இவ்வாறு மதுபான நிலையங்கள் மூடப்படவுள்ளன.

தேசிய பொசன் பண்டிகையை முன்னிட்டு இந்த நாட்களில் மதுபான நிலையங்கள் மூடப்படும் என இலங்கை கலால் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மத்திய நுவரகம், கிழக்கு நுவரகம்  மற்றும் மிஹிந்தலை பிரிவு 03 ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் அக்காலப்பகுதியில் மூடப்படவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X