2021 ஜூன் 17, வியாழக்கிழமை

தங்காலையில் பொன்சேகாவின் ஆதரவாளர் மீது துப்பாக்கிச்சூடு; ஒருவர் பலி,8 பேர் காயம்

Super User   / 2010 ஜனவரி 12 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்கள் பயணித்த பஸ்ஸின் மீது இன்று நண்பகல் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டார்.

இத்துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின்போது சுமார் 8 பேர் காயமடைந்துள்ளதாக ஜெனரல் பொன்சேகாவின் ஊடகப்பிரிவு டெயிலிமிரர் இணையத்தளத்திற்கு  அறிவித்தது.

இது தொடர்பாக பொலிஸாருடன் தொடர்புகொண்டு கேட்டபோது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரே துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டதாக தெரிவித்தனர். சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு பிரயோகத்திற்கான காரணம் எதுவும் தெரியவில்லை என்றும் பொலீஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .