2021 ஜூன் 16, புதன்கிழமை

மீள்குடியமர்த்தப்படவேண்டிய நிலையில் 80,000 தமிழ் மக்கள்-ரிஷாத் பதியுதீன்

Super User   / 2010 பெப்ரவரி 01 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா நலன்புரி நிலையங்களில் இன்னும் 80,000 இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்கியிருப்பதாக மீள்குடியேற்றம், அனர்த்த நிவாரணசேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதிக்குள் இடம்பெயர்ந்திருக்கும் மக்கள் அனைவரும் மீள்குடியேற்றப்பட்டுவிடுவார்கள் என ஐக்கிய நாடுகள் சபைக்கு, இலங்கை அரசாங்கம் உறுதியளித்திருந்த நிலையிலேயே, அமைச்சர் டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு இதனைக் கூறினார்.

இந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில்  எந்த அமைப்பினருக்கும் காலக்கெடு எதனையும் அரசாங்கம் வழங்கவில்லை  எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். அத்துடன்,  இடம்பெயர்ந்த தமிழ் மக்களை கூடிய விரைவில் மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டிருப்பதாகவும் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் கண்ணிவெடிகளை அகற்றுவது தொடர்பில் ஜனாதிபதிக்கு விளக்கிக் கூறியிருப்பதாகவும் அவர் கூறினார்.  1000 பொதுமக்கள் ஏற்கனவே மீள்குடியேற்றப்பட்டிருப்பதாகவும் நாளை 1000 பேர் மீள்குடியேற்றப்படவிருப்பதாகவும்  மீள்குடியேற்றம், அனர்த்த நிவாரணசேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டார்.

கடந்த வருடம் இந்தியாவிற்கு சென்றிருந்த இலங்கை உயர்மட்ட தூதுக்குழுவினர் ஜனவரி மாதத்திற்குள் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டுவிடுவார்கள் என உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .