2026 மார்ச் 13, வெள்ளிக்கிழமை

9 வயது சிறுவனை பல முறை கத்தியால் குத்திய 14 வயது சிறுவன்

Freelancer   / 2024 ஜூன் 06 , பி.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பாந்தோட்டை, அங்குனகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் நேற்று (5) கத்திக் குத்துக்கு இலக்காகி 9 வயது சிறுவன் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் தனது வீட்டில் தனிமையில் இருக்கும் போது அயல் வீட்டில் வசிக்கும் 14 வயது சிறுவனால் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தையடுத்து, சந்தேக நபரான 14 வயது சிறுவன் விஷம் அருந்தியுள்ள நிலையில் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

9 வயதான சிறுவனின் உடலில் சுமார் 6 முதல் 7 கத்தி குத்து காயங்கள் காணப்படுவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கத்தி குத்தை நடாத்திய 14 வயதான சிறுவன், வீடியோ விளையாட்டுக்களுக்கு அடிமையானவர் என தெரிய வருகிறது.

இந்த நிலையில், பிரதேச மக்கள் ஒன்று கூடி, சிறுவனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குணுகொலபெலஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .