2021 ஜூன் 17, வியாழக்கிழமை

மதுரங்குளி தேர்தல் வன்முறையில் ஒருவர் பலி; 9 பேர் காயம்

Super User   / 2010 ஜனவரி 17 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம், மதுரங்குளிப் பகுதியில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கும், ஐக்கியப்  தேசியக் கட்சியின் ஆதரவாளர்களுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தில்  9 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ஐ.எம்.கருணாரட்ன டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு கூறினார்.

ஆனமடுவப் பகுதியில் நடைபெறவிருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பெருமளவிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள், ஐக்கிய தேசியக் கட்சி அலுவலகத்தைச் தாண்டிச் சென்றுகொண்டிருந்தபோதே இந்தச் சம்பவம்  இடம்பெற்றதாகவும் அவர் கூறினார்.

இந்த நிலையில், இரண்டு தரப்பினரின் ஆதரவாளர்களும் காயமடைந்திருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தை எந்தத் தரப்பினர்  முதலில் ஆரம்பித்தனர் என்பது தொடர்பில் எதுவும் தெரியவில்லையெனத் தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் ஐ.எம்.கருணாரட்ன, இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .