2021 ஜூன் 14, திங்கட்கிழமை

ஜேவிபி, UNP யுடன் ஒரு போதும் கூட்டுச்ச்சேரவில்லை - அமரசிங்க

Super User   / 2010 பெப்ரவரி 19 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்கள் விடுதலை முன்னணி தலைவர் சோமவன்ச அமரசிங்க நேற்று ஜேவிபி ஒரு போதும் ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி வைக்கவில்லை என்றும், ஒவ்வொரு கட்சியும் தனித்தனியாகவே ஜென. சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு அளித்தனர் என்றும் விளக்கம் அளித்தார்.   
"நாங்கள் UNP உடன் ஒருநாளும் கூட்டு சேரவில்லை; நாம் ஜென போன்செகவை ஆதரித்தோம்; UNP யும்  ஜென போன்செகவை ஆதரித்தது; அதுபோல் அனைய கட்சிகளும் போன்செகவை ஆதரித்தன,"  என்று சோமவன்ச எமக்கு தெரிவித்தார்.
"எம்மிடையே  இருந்த ஒரே ஒரு உடன்பாடு ஜென சரத் போன்செகவை வெல்ல வைக்க வேண்டும்; நல்லாட்சி, நல்ல ஜனநாயகம் என்பவற்றை கொணர வேண்டும்  என்பதுதான்," என்று அவர் கூறினார்.

ஜனாதிபதி தேர்தலின் பின் கட்சி பலவீனமடைந்திருக்கின்றது என்னும் கருத்தை அமரசிங்க முற்றாக மறுத்தார்.

"ஜென. போன்செகவை ஆதரித்ததற்காக எமது தொண்டர்கள் எவரும் கட்சியை விட்டு விலகவில்லை," என்று அவர் கூறினார்.

தற்போது பாராளுமன்ற தேர்தலுக்காக ஜேவிபி யினர் சரத் பொன்சேகாவை தலைவராகக் கொண்டு ஒரு புதிய ஜனநாயக முன்னை என்னும் ஒரு முன்னணியை அமைத்திருக்கின்றார்கள். 

 புதிய ஜனநாயக முன்னணியை பற்றி வினவிய போது  "அவர் ( ஜென. பொன்சேகா) தனது உடன்பாடை எமக்கு தந்துள்ளார்; நான் தடுமாறவில்லை: அவர் தடுமாறவில்லை, JVP தடுமாறவில்லை, முன்னணியில் சேர உடன்பட்டிருக்கும் ஏனைய கட்சிகள் தடுமாறவில்லை ," என்று அமரசிங்க கூறினார்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .