2021 ஜூன் 19, சனிக்கிழமை

கடலுக்கடியில் தேன்நிலவு..!

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 29 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எதையுமே வித்தியாசமாக செய்யத்துடிக்கின்ற மனிதனுக்கு வித்தியாசமான அனுபவங்களை வழங்குகின்ற பல நிபுணர்கள் இருக்கிறார்கள். அந்தவகையில் மாலைதீவுகளில் ரங்காலி தீவில் அமைந்துள்ள கொன்ராட் ஹோட்டல் தனது வாடிக்கையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்குகின்றது.

கடல்மட்டத்திலிருந்து 5 மீற்றர் ஆழத்தில் இந்த ஹோட்டலில் ‘இத்தா’ என்னும் ரெஸ்ட்டோரன்ஸ் இருந்தது. தனது 5ஆவது வருட நிறைவினை முன்னிட்டு கடந்த ஏப்ரல் மாதம்முதல் இந்த ‘இத்தா’வினை தேன்நிலவு அறையாக மாற்றியமைத்திருக்கிறார்கள்.

கடலுக்கடியில் இதமான வெளிச்சத்தில் உல்லாசமாக தேன்நிலவை களிப்பதற்கு இந்த ஹோட்டலில் வசதிகள் செய்துகொடுக்கப்படுகின்றன. எவருடைய தொந்தரவும் இல்லாமல் மீன்களையும் கடல் நீரினையும் ரசித்தபடி உல்லாசமான தேன்நிலவினை இந்த இடத்தில் கொண்டாட முடியும். இதில் ஓர் இரவு தங்குவதற்கு சுமார் 2 லட்சம் ரூபாய்களை செலவு செய்ய வேண்டும் நீங்கள்..!


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .