Kogilavani / 2017 ஜனவரி 27 , மு.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

உலகில் மிக நீளமான வாலையுடைய நாயென்ற பெயரை, “கியோன்” என்றழைக்கப்படும் ஐரிஸ் வுல்பவுன்ட் வர்க்க நாய் பெற்றுக்கொண்டுள்ளது.
இதற்கான கின்னஸ் சான்றிதழையும், கியோன் தன்வசப்படுத்தியுள்ளது.
பெல்ஜியம், வெஸ்டெர்லோ மாகாணத்தில் வசித்து வரும் குடும்பமொன்று, ஐரிஸ் வுல்பவுன்ட் வர்க்க நாயொன்றை வளர்த்து வருவதுடன், அதற்கு கியோன் என்றும் பெயரிட்டுள்ளனர்.
ஐரிஸ் வுல்பவுன்ட் வர்க்க நாய்களின் வால் எப்போதும் நீளமாகக் காணப்படும். ஆனால், கியோனின் வாலானது, அதன் வர்க்க நாய்களுடன் ஒப்பிடும்போது, மிக நீளமாகக் காணப்படுவதாக கியோனின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கியோனின் வாலின் நீளம், 76.8 சென்றி மீற்றர் என அளவிடப்பட்டுள்ளது. இத்தகைய நீளமான வாலையுடை கியோன், முந்தைய சாதனையையும் முறியடித்துள்ளது.
இதற்கு முன்பு சாதனை நிகழ்த்திய நாயின் வாலைவிட, கியோனின் வால் 4.5 சென்றி மீற்றர் நீளமுடையது என, கின்னஸ் சாதனை நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

8 hours ago
8 hours ago
8 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
8 hours ago
20 Dec 2025