Kogilavani / 2011 மார்ச் 21 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரிட்டனைச் சேர்ந்த இரவு விடுதியொன்றின் உரிமையாளரான ஸ்டீவ் ஸ்டீவன்ஸ் என்பவர் தொடர்ச்சியாக 131 மணித்தியாலங்கள் நடனமாடி உலக சாதனை படைத்துள்ளார்.
மேற்கு சசெக்ஸ் பிராந்தியத்திலுள்ள தனது இரவு விடுதியில் அவர் மார்ச் 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இந்த நடனத்தை ஆடுதவதற்கு ஆரம்பித்துள்ளார். இவர் நடனத்தை நிறைவு செய்தது கடந்த 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையாகும்.
இடைவிடாது தொடர்ச்சியாக ஆடியதால் ஸ்டீவின் வலது கால்கள் வலிக்கத் தொடங்கின. ஆனாலும் அவர் தொடர்ந்து இடைவிடாது இந்த நடனத்தை 5 நாட்கள் ஆடியுள்ளார்.
கின்னஸ் உலக சாதனையின் விதிகளுக்கு அமைவாக அவர் அந்த குறிப்பிட்ட 5 நாட்களில் ஒவ்வொரு மணித்தியாலமும் 5 நிமிடங்கள் மாத்திரம் ஓய்வெடுத்துக் கொண்டுள்ளார்.
ஸ்டீவ் புரதச்சத்து நிறைந்த உணவுகள், பழங்கள், உருளைக் கிழங்கு, சிப்ஸ், போன்றவற்றை உணவாக உட்கொண்டு வந்தார். ஆனாலும் அவரது உடலின் நிறை 5 நாட்களில் சுமார் ஒன்றரை கிலோ குறைவடைந்துவிட்டது.
ஸ்டீவ் அவரது நேரத்தை நடனம் மட்டும் இசை என்பவற்றில் செலவழிப்பவர். இந்த நடன நிகழ்ச்சிக்காக 30 பேர் கொண்ட டீ.ஜே. குழுவொன்று இசையை ஒலிக்கவிட்டது.
' எனது நடனத்தில் மிகவும் சிரமமான தருணமாக அதிகாலை 4 மணி மற்றும் 6 மணி வரையான நேரம் இருந்தது. மக்கள் என்னை விழித்துக்கொள்ளுமாறு சத்தமிடுவார்கள்.
ஆனால் சூரியன் உதிக்கத் தொடங்கியவுடன் மீண்டும் உற்சாகம் வந்துவிடும்' என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு 123 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் தொடர்ச்சியாக நடனமாடியவரின் சாதனையை ஸ்டீவ் முறியடித்துள்ளார். இதன் மூலம் வைத்தியசாலையொன்றுக்கு 3.200 ஸ்ரேலிங் பவுண்களை அவர் திரட்டியுள்ளார்.
7 minute ago
23 minute ago
49 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
23 minute ago
49 minute ago
53 minute ago