Kogilavani / 2010 செப்டெம்பர் 11 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரிட்டனைச் சேர்ந்த 17 வயதான ஜெய்மி டைரெல் எனும் யுவதி உலகின் மிக இளமையான 'மரணக்கிணறு' சாகச மோட்டார் சைக்கிள் ஓட்டும் பெண்ணாக விளங்குகிறார்.
இதற்காக அவர் தனது பாடசாலைக் கல்வியையும் இடைநிறுத்தியுள்ளார். அவர் இன்னும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கான அனுமதிப்பத்திரம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சாகசப் பிரியையான ஜெய்மி, 32 அடி அகலமான மரணக் கிணற்றில், மோட்டார் சைக்கிளை 20 அடி உயரத்தில் 45 கிலோமீற்றர் வேகத்தில் ஓட்டிச்சென்று வியக்கவைக்கிறார்.
'ஜெய்மி ஸ்டார்' என்ற பெயரில் மோட்டார் சைக்கிளை செலுத்தும் அவர், எப்போதும் தலைக்கவசத்தை அணிந்ததில்லை.
இழுவை விசையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் தலைக்கவசம் அணியாமலேயே
அவர் மரணக்கிணற்றில் மோட்டார் சைக்கிளை செலுத்துகிறார். அத்துடன், புவியீர்ப்புவிசையை விஞ்சுவதற்காக தொடர்ச்சியாக சீரான வேகத்தில் செல்ல வேண்டும். இல்லையென்றால் அவர் கீழே விழ நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
கேம்பிரிஜ் ஹாவெர்ஹில் பகுதியில் வளர்ந்தவர் ஜெய்மி. அவருக்கு இந்த சாகசத் தொழிற்துறையை தெரிவுசெய்வதில் எந்த கவலையும் இல்லையாம். ஆபத்து நிறைந்த மரணக் கிணற்றில் பயணம் செய்யும் இந்த விளையாட்டில் தான் அதிகமாக ஈர்க்கப்பட்டதாக அவர் தெரிவிக்கிறார்.
'நான் கடந்த வருடமே மோட்டார் சைக்கிள் ஓட்டுவதற்கு பயிற்சியெடுத்தேன். ஒரு மாதத்திலேயே நான் மரணக் கிணற்றில் மோட்டார் சைக்கிளை செலுத்தினேன்' என்று அவர் தெரிவித்துள்ளார்.
அவருக்கு இந்த மோட்டார் சைக்கிள் சாகசத்தை, அவரது குடும்ப நண்பரான கென் பொக்ஸ் என்பவரே அறிமுகப்படுத்தி வைத்தாராம்.
'எனக்கு 11 வயதாக இருக்கும் போது முதல்முதலாக இந்த சைக்கிள் சவாரி வாய்ப்பு கிடைத்தது. கென், மோட்டார் சைக்கிள் கைப்பிடியை பிடிக்கச் செய்தவாறு என்னை வைத்திருந்து மரணக்கிணற்றில் மோட்டார் சைக்கிளை செலுத்துவார். நான் அதை விரும்பத் தொடங்கினேன்' என்கிறார் ஜெய்மி.
6 minute ago
22 minute ago
48 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
22 minute ago
48 minute ago
52 minute ago