Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Kogilavani / 2012 மார்ச் 09 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிறிய நிறத்தை (அல்பினிஸம்) கொண்ட அங்கத்தவர்களை அதிகமாகக் கொண்டு நீண்ட குடும்பம் என்ற கின்னஸ் சாதனையை இந்தியாவை சேர்ந்த புலான் ரோஸ்துறை என்பவரது குடும்பம் நிலைநாட்டியுள்ளது.
இந்தியாவின் டில்லியில் வசித்து வரும் மேற்படி குடும்பத்தில் மொத்தமாக 10 உறுப்பினர்கள் வெளிறிய நிறத்தை உடையவர்களாக உள்ளனர்.
ரோஸ்துறை என்ற 50 வயது நபரின் தலைமைத்துவத்துவமாக கொண்ட அவரது குடும்பத்தில் இவரது மனைவி மணி (வயது 45), பிள்ளைகளான மகன் சங்கர்(24 வயது), விஜய் (வயது 25), ராமகிருஷ்ணன் (வயது 19), மற்றும் அவரது பெண் பிள்ளைகளான ரேனு (வயது 23), தீபா (வயது 21), மற்றும் பூஜா (வயது 18) ஆகியோரும் இவ்வாறு வெளிறிய நிறத்தை கொண்டவர்களாக காணப்படுகின்றனர்.
இக்குடும்பத்தைச் சேர்ந்த ரேணு என்ற பெண் திருமணம் செய்துகொண்டு ரோஷேஸ் என்ற 27 வயதுடைய நபரும் இவ்வாறு வெளிறிய நிறத்தையுடைவராக காணப்படுகின்றார். இவர்கள் இருவருக்கும் பிறந்த தர்மாரஜ் என்ற 2 வயது குழந்தையும் வெளிறிய தோற்றத்தை கொண்டு காணப்படுகின்றது.
இவர்களை பார்க்கும் கிராமத்தவர்கள் இவர்கள் இந்தியர்களா சந்தேகிக்கின்றனர்.
'எங்களை மக்கள் 'எங்கிரஸ'; என்று அழைப்பதை நான் கேட்டுள்ளேன். இதற்கு ஆங்கிலேயர்கள் என்று அர்த்தம். எங்களால் சிறப்பாக பார்;க்க முடியாது, சூரிய வெப்பத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருக்க முடியாது. எனினும் முடிந்தவரை சிறப்பாக வாழ்ந்து வருகிறோமென' ரோஸ்துறை புளான் தெரிவித்துள்ளார்.
உலகில் 17,000 பேருக்கு இந்த அல்பினிஸ பாதிப்பு காணப்படுவதுடன் இதற்கு மெலனின் உற்பத்தி போதுமானாதாக இல்லாமையே காரணமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
17 minute ago
43 minute ago
51 minute ago