2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

21அடி நீளமான முதலை...

A.P.Mathan   / 2011 செப்டெம்பர் 07 , மு.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

21அடி நீளமும் சுமார் ஒரு டொன் நிறையுமுடைய முதலை ஒன்றினை பிலிப்பைன்ஸ் நாட்டின் மின்டனாவோ தீவில் விவசாயிகள் சிலர் வலைவிரித்துப் பிடித்துள்ளனர். இதுவரை பிடிபட்ட முதலைகளில் இதுவே மிகப்பெரியது எனக் கருதுகிறார்கள்.

கிராம மக்களுக்கு மிகவும் தொல்லை கொடுத்துவந்த இந்த முதலை பல விவசாயிகளையும் மீனவர்களையும் விழுங்கியிருக்கிறது. கடந்த ஜூலை மாதத்திலும்கூட 12 வயது சிறுமி ஒருத்தியையும் இந்த முதலை தின்றதாக ஊர் மக்கள் குறிப்பிடுகிறார்கள்.

உவர்நீர் முதலை இனத்தினைச் சேர்ந்த இந்த இராட்சத முதலையே உலகில் பிடிபட்ட மிகப்பெரிய முதலையாக கருதுகிறார்கள். அவுஸ்திரேலியாவின் இயற்கை பூங்காவில் இருக்கின்ற 5.48 மீற்றர் (கிட்டத்தட்ட 18 அடி) நீளமாக முதலையே இதுவரை உலகின் மிகப்பெரிய முதலையாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதுவரை உலகில் பிடிபட்ட முதலைகளில் 20.3 அடி நீளமாக முதலை தோல் ஒன்றினை கண்டுபிடிப்பாளர்கள் கண்டுபிடித்திருந்தனர். ஆனால் இப்பொழுது பிடிபட்ட முதலைகளில் இந்த 21 அடி நீளமான இந்த முதலையே உலகின் பெரிய முதலை என கணிப்பிடப்பட்டிருக்கிறது. Pix: Reuters


  Comments - 0

  • siraj Thursday, 08 September 2011 05:07 AM

    இது அவர்களுக்கு நல்ல கறி.

    Reply : 0       0

    tvamban Friday, 09 September 2011 01:07 AM

    பூனை அம்பிட்டா வீடுக்குக்கானும், முதலை அம்பிட்டா ஊருக்குக்கானும் .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .