Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mayu / 2024 ஒக்டோபர் 24 , பி.ப. 02:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
லக்ஸ்மன்
ஐக்கிய நாடுகள் சபையை, இலங்கையின் பெரும்பான்மை அரசாங்கங்களால் தொடர்ச்சியாகப் நெருக்குதல்களை அனுபவிக்கும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் நீதி வழங்கும் கனவானாகவே இதுவரையில் பார்த்துவருகின்றனர்.
ஆனால், இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் வரைபு தீர்மானம் தமிழர்களின் நம்பிக்கையை உடைத்தெறிவதாகவே அமைந்துவிடுவது வழமையாகி விட்டது.
அந்தவகையில் இலங்கை அரசு மீது மென்போக்கை தொடர்ந்தும் பேணும் வகையில் இம்முறையும் கொண்டுவரப்படும் தீர்மானத்தினை தமிழர்கள் நிராகரிக்கும் தீர்மானத்தினை எடுக்கவுள்ளனர்.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் எதிர்கொண்டுவரும் நெருக்கடிகளுக்கு எந்தவிதமான பரிகாரமும் இன்றி, இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்னெடுத்துவரும் 6 நாடுகள் வெளியிட்டுள்ள வரைபு அறிக்கையில், தற்போது நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது அமர்வில், அதன் உயர்ஸ்தானிகர் சமர்ப்பித்த அறிக்கையை வரவேற்கிறோம்.
அத்துடன், மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் தீர்மானம் 51/1 அடிப்படையில் தொடர்புடைய அனைத்து பணிகளையும் நீட்டிப்பது, அவையில் 58ஆவது அமர்வில், ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வாய்மொழியாக ஒரு அறிக்கையை அளிப்பது, மற்றும் தமது 60ஆவது அமர்வின் போது, இலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் விவாதிக்கப்படக் கூடிய முழுமையான அறிக்கையை அளிப்பர் என தீர்மானிக்கிறது. என்ற இரு விடயங்களை உள்ளடக்கியதாக அந்த வரைபு தீர்மானம் இந்த அமர்வில் வாக்களிப்புக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால், இந்த தீர்மானத்தை முன்மொழிந்துள்ள கனடா, பிரித்தானியா, அமெரிக்கா, மலாவி, மொண்டநிக்ரோ மற்றும் வடக்கு மசிடோனியா ஆகிய ஆறு நாடுகளின் முக்கிய குழுவிடம், 60ஆவது அமர்வு வரை இலங்கைக்கு மேலும் அவகாசம் அளிப்பது, கடந்த 15 ஆண்டுகளாக தமது உறவுகளைத் தேடுபவர்களின் வலி மற்றும் வேதனைகளை அதிகரிக்கவே செய்யும் என கலந்துரையாடல் வேளைகளில் தமிழர் தரப்பினர் முன்வைப்புக்களை மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டங்களில் பங்குபெறச் சென்றிருக்கும் தமிழர்கள், இந்த வரைபு தீர்மானம் பாதிக்கப்பட்டவர்கள் என்ன கருதுகிறார்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகளின் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பிரதிபலிக்கவில்லை என்றும் கூறியுள்ளனர்.
இதன்போது, “இது பாதிக்கப்பட்டவர்களை மையப்படுத்தவில்லை” என உலகத் தமிழர் பேரவையின் ஐ.நாவிற்கான பிரதிநிதி நிஷா பீரிஸ் கூறுகிறார். மியன்மார் குறித்த தீர்மானம் போன்று, இந்த தீர்மானமும் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்பதை கூற வேண்டும்.
அந்த தீர்மானத்தில், ரக்கைன் மாகாணத்தில் ரோஹிங்யா மக்களே பாதிக்கப்பட்டவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது. மியன்மாரைப் போன்று, பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் என்ற வகையில், இலங்கையிலுள்ள தமிழர்கள் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்கள் என கூறப்பட வேண்டும் என்று நாங்கள் வேண்டுகிறோம். மேலும் இலங்கை நிலைவரங்களைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்கச் சிறப்பு அறிக்கையாளர் ஒருவரும் நியமிக்கப்பட வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.
“நீதி கிடைக்காமலே நாங்கள் உயிரிழக்கும் நிலைக்கு விடாதீர்கள்” ”பொறுப்புக்கூறல் இல்லாமல், நல்லிணக்கம் சாத்தியமில்லை” என்று இலங்கையின் வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் உறவினர்களின் சங்கத்தின் செயலாளரான லீலாதேவி ஆனந்தநடராஜா உருக்கமாக வேண்டியிருக்கிறார்.
முக்கிய குழு உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் மற்றும் தங்களது உரைகளின் போது ஒருமித்த குரலில் “அந்த வரைபு தீர்மானம் மாற்றி எழுதப்பட வேண்டும், அதில் இலங்கைக்கு ஒரு சிறப்பு அறிக்கையாளர் நியமிக்கப்படுவது பரிந்துரைக்கப்பட வேண்டும்” அதே நேரத்தில், இந்த வரைபு தீர்மானம் சர்வதேச தலையீட்டைப் பரிந்துரைக்கவில்லை மற்றும் சர்வதேச பொறிமுறை தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எதிரொலிக்கும் அதே வேளையில், அது அவர்கள் மீது சுமத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
போர் முடிந்து 15 ஆண்டுகள் முடிந்த பிறகும், போராட்டத்தில் ஈடுபட்ட 250 பெற்றோர்கள் உயிரிழந்த பிறகும், எமக்கு நீதி வழங்கப்படவில்லை.
சர்வதேச பொறிமுறை ஒன்றை ஏற்கும்படி இலங்கை அரசின் மீது அழுத்தம் அளிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பே தமிழர் தரப்பினரிடம் காணப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களை மையப்படுத்தாது.
தமிழர்களுக்கு நீதியை வழங்காது பாதிப்புக்குக் காரணமான அரசாங்கத்திற்கு வாய்ப்புகளை மீண்டும் மீண்டும் ஐ.நா. வழங்கி வருகின்றமையானது சர்வதேச நாடுகளின் பாரபட்சமாகவே பார்க்கப்படவேண்டும் என்பது பொதுவான கருத்தாகக் காணப்படுகிறது.
சுவிட்சர்லாந்து, ஜப்பான் மற்றும் தென் ஆபிரிக்க நாடுகளின் தூதர்கள் வடக்கு மாகாணத்திற்கான விரிவான பயணத்திற்குப் பின்னர், போரினால் பாதிக்கப்பட்டவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் சிவில் சமூகத்தினரிடம் பேசும்போது, சர்வதேச பொறிமுறை ஒன்றை ஆதரிப்பதாகக் கூறியிருந்தனர்.
“முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற நிகழ்வின்போது பாதிக்கப்பட்டவர்களின் பங்களிப்பு அல்லது உடன்பாடு இல்லாமல் எந்தவிதமான திணிப்பும் நடைபெறாது என்று உறுதியளிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், நடைபெற்றுவரும் கால அவகாசம் வழங்கலுக்கான செயற்பாடு தவறானதாக அமையும் என்பதுடன், உள்நாட்டு பொறிமுறைகளை சர்வதேச நாடுகள் நிராகரிக்க வேண்டும் என்றும் அதற்கு ஆதரவளிக்கக்கூடாது என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸை தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகளுக்கான பெண்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த செல்வியா செல்லத்துரை, அந்த ஆறு நாடுகளின் குழு நம்பத்தகுந்த வகையில் போர்க் குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகியுள்ள இலங்கை அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆகியோர் மீது கனேடிய மற்றும் அமெரிக்க அரசுகள் முன்னெடுத்துள்ளது போன்று இலக்கு வைத்த பன்னாட்டுத் தடைகளை பரிந்துரைக்க வேண்டும்.“இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு இந்த முக்கிய குழு பரிந்துரைக்க வேண்டுமென நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்” என கூறியுள்ளார்.
மொத்தத்தில் 15 ஆண்டுகள் கடந்தும் இலங்கை அரசாங்கம் உள்ளகப் பொறிமுறையை நடைமுறைப்படுத்தவுள்ளதாக வெளிப்படுத்துவதும், அதனை ஐ.நாவும் சர்வதேச நாடுகளும் நம்பிச் செயற்படுவதும் ஒரு பாரபட்சமாகவே தமிழர் தரப்பினால் பார்க்கப்படுவது தவறில்லை என்ற நிலைமையே உருவாகியிருக்கிறது.
ஐ.நா.மனித உரிமைகள் ஆஐணயாளரது வாய் மொழிமூல அறிக்கை வெளிப்படுத்தப் பட்டது முதலே தம்முடைய எதிர்ப்பை வெளியிட்ட இலங்கை பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையில் வெளித் தலையீடு தேவை என்பதை முற்றாக நிராகரித்தது.
அத்துடன், “அப்படியான பொறிமுறையை உள்ளக ரீதியாகவே முன்னெடுத்துச் செல்லும் திறமையும், சட்டங்களும் இலங்கையில் உள்ளன” என்றும் தெரிவித்தது. ஆனால், வரைபு தீர்மானத்தின் மீது தமது ஆழ்ந்த ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள தமிழர்கள், அந்த முக்கிய குழு உறுப்பினர்களிடம், இலங்கை வடக்கு மற்றும் கிழக்கில் இருக்கும் தமிழர்களின் நிலை குறித்து ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக்கு அறிக்கை ஒன்றை அளிக்குமாறு விடுத்துள்ள கோரிக்கைக்குப் பலன் தீர்மானத்தின் போது கிடைக்குமா என்பதனை காத்திருந்தே பார்க்கவேண்டும்.
யுத்த மௌனிப்பின் பின்னர் தமிழர்களால் மேற்கொள்ளப்பட்டுவந்த இராஜதந்திர முயற்சிகளுக்கு வெற்றி இதுவரையில் கிடைக்கவேயில்லை.
தோல்வியின் பயனான விடயங்களே விளைந்துவருகின்றன. இதன் ஒரு நிலையே நாட்டில் புதிதாகத் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி பொறுப்புக்கூறலை உறுதி செய்து நல்லிணக்கத்தைப் பேண வேண்டும் என்ற மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் வோகர் டர்க்கின் செப்டெம்பர் அமர்வுக்கான முன் அறிக்கை கூறும் கருத்தாக இருந்தது.
அதேபோன்று, தீர்மானத்துக்கான வரைபு கூட இதனையே ஒப்புவிப்பதாக இருப்பதாக அறியமுடிகிறது. இவ்வாறே நகர்ந்து கொண்டிருந்தால் தமிழர்கள் நீதியை தொடர்ந்தும் தேடுபவர்களாகவே இருக்கமுடியுமே தவிர, வேறொன்றுமில்லை.
ஆதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கப்படும் கால அவகாசத்தால் எந்தப் பயனும் விளையப்போவதில்லை என்பதனை ஐ.நாவும் சர்வதேச நாடுகளும் உணர்ந்து கொள்வதே முக்கியம்.
23.09.2024
8 minute ago
30 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
30 minute ago
2 hours ago
2 hours ago