Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Johnsan Bastiampillai / 2021 செப்டெம்பர் 29 , பி.ப. 02:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி.சகாதேவராஜா
இருக்கும் அவசரத்தில் குழந்தையைக்கூட பார்த்துக்கொள்வதற்கு சிலருக்கு நேரமிருக்காது. காலையில் அலுவலகம் சென்றால், அக்குழந்தைகள் நித்திரையில் இருக்கும் போதுதான் சிலர் வீட்டுக்கே திரும்புவர், பாலூட்டும் சில தாய்மார்களும் அவ்வாறான நிலைமைக்கு முகங்கொடுத்திருப்பவர்.
பாலூட்டும் தாய்மார்கள், தங்களுடைய குழந்தைக்குத் தேவையான பாலை பீச்சியெடுத்து, குளிரூட்டியில் வைத்துவிட்டுச் சென்றுவிடுவர், வேலையாட்கள் அல்லது வீட்டில் இருப்போர், குழந்தை அழும்போது அதனை எடுத்து புகட்டுவர்.
தாய்ப்பாலை குளிரூட்டியில் வைத்து குழந்தைக்கு கொடுக்கலாமா? என்பது தொடர்பில், கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட சிரேஸ்ட விரிவுரையாளரும் மட்.போதனா வைத்தியசாலையின் விசேட குழந்தை நல வைத்திய நிபுணருமான டொக்டர் விஜி திருக்குமாரிடம் கேட்டோம்.
தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள், உங்களது தாய்ப்பாலை பீய்ச்சி எடுத்து அதை நீங்கள் 6-8 மணித்தியாலங்கள் வெளியில் வைக்கலாம். அதாவது சூழல் வெப்பநிலையில் வைத்து பிள்ளைக்கு ஊட்டலாம். தவறும் பட்சத்தில் அதே பாலை குளிரூட்டியின் கதவில் (refrigerator door) வைத்து 24 மணி நேரம் வைக்கலாம். மேலும் இன்னும் பல மணிநேரம் குளிரூட்டியில் வைக்க தேவைப்படின், குளிரூட்டியின் ஆழ்உறைப்பகுதியில் (deep freezer) 6 மாதம் வரை பாதுகாப்பாக வைக்கலாம்.
குளிரூட்டியிலுள்ள போத்தலில் உள்ள பாலை குழந்தைக்கு கொடுக்கும் நேரம், சற்று சுடுநீரில் பால்போத்தலை வைக்கும் நேரம், அந்தப் பால் மெதுவாக கரைந்து வரும். ஏற்ற அளவு, பிள்ளைக்குக் கொடுக்கலாம்.
இது குறிப்பாக, முலை தட்டையாக உள்ளவர்களுக்கும், தாய்ப்பால் கொடுக்க முடியாது என்பவர்களுக்கும், வேலைக்கு செல்லும் தாய்மாருக்கும் ஒரு ஆலோசனை. இனி வரும் காலங்களில், குழந்தைகளுக்குரிய புட்டிப்பால் இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளதால், இனி தாய்ப்பால் கொடுக்கும் சந்தர்ப்பங்கள் கூடுதலாக இருக்கும். அப்படிப்பட்ட நிலையில் மேற்படி தாய்ப்பால் ஊட்டும் செயற்பாட்டினை, செய்தியினை நான் விரும்புகிறேன்.
நீங்கள் தாய்ப்பாலை பிசுக்கி எடுக்கும் முறையை உங்கள் குடும்ப சுகாதார அதிகாரி சுகாதார தாதி (mid wife) போன்றவர்களுடன் தனிப்பட்ட உரையாடலின் மூலம் பெற முடியும். காரணம் தொலைபேசியினூடாக ஆலோசனையினை வழங்க முடியாத சூழ்நிலை காரணமாகவும் மற்றும் நேரடியாகக் காட்டி தர வேண்டும் என்பதாலும் மேற் கொண்ட சுகாதார அதிகாரியின் ஆலோசனை நாடவும்.
36 minute ago
59 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
59 minute ago
2 hours ago
3 hours ago