2024 மே 02, வியாழக்கிழமை

ஜனாதிபதியான பழங்குடியின பெண் திரௌபதி முர்மு

Editorial   / 2022 ஜூலை 25 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
இலங்கையின் ஜனாதிபதி பதவி உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும்  விமா்சனங்களையும், அதிருப்திகளையும், சா்ச்சைகளையும், கொந்தளிப்புகளையும் உருவாக்கியிருக்கின்ற நிலையில் எமது அயல் நாடான இந்தியாவில்,  ஜனாதிபதி பதவி ஒரு பேசு பொருளாகியுள்ளது. 
 
ஜனாதிபதியாக தொிவு செய்யப்பட்டிருக்கும் திரௌபதி முர்மு பற்றி உலகமெல்லாம் செய்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன.
 
இந்தியாவின் 15வது ஜனாதிபதியாக திரௌபதி முர்மு என்ற பழங்குடியின பெண் தோ்ந்தெடுக்கப்பட்டதே இதற்குறிய காரணமாகும். இடம்பெற்ற ஜனாதிபதி வாக்கெடுப்பில் 3219 வாக்குகளில் 2161 வாக்குகள் இவருக்கு கிடைத்துள்ளன. எதிர்க் கட்சினரும் இவருக்கு தமது வாக்குகளை அளித்திருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. 
 
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் ஜுலை மாதம்  24-ம் திகதியுடன் முடிவடையும் நிலையில், ஆளும் கட்சியான பா.ஜ.க. சாா்பாக திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சாா்பாக  யஷ்வந்த் சின்காவும் வேட்பாளராக நிறுத்தப்பட்டனா்.
 
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரான திரௌபதி முர்மு எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை தோற்கடித்தார். 
 
திரௌபதி முர்மு இந்தியாவின்  பழங்குடி இனமான சந்தல் என்ற இனத்தைச் சோ்ந்தவா். இதன் மூலம் இந்தியாவின் முதல் பழங்குடியின ஜனாதிபதி என்ற பெருமையும், இரண்டாவது பெண் ஜனாதிபதி என்ற பெருமையும்  திரௌபதி முர்முவுக்குக் கிடைத்துள்ளது. இந்தியாவின் முதலாவது பெண் ஜனாதிபதி என்ற பெருமை பிரதீபா பட்டேலுக்கு கிடைத்தது.
 
அதிக மக்கள் தொகையைக் கொண்ட பல இனங்கள் வாழுகின்ற, பல மொழிகள் பேசப்படுகின்ற மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று வா்ணிக்கப்படுகின்ற  இந்தியாவின் வரலாற்றில் சிறுபான்மை சமூகத்தை, சிறுபான்மை இனத்தைச் சோ்ந்த பலருக்கு இத்தகைய உயா் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 
 
ஆனால், இலங்கையில் சிறுபான்மை சமூகத்திற்கு, ஒரு சிறுபான்மை இனத்திற்கு அரச அதிகாரத்தில் இப்படி ஒரு பதவி கிடைப்பதை நினைத்துக் கூட பாா்க்க முடியாத நிலை இருக்கிறது. இலங்கை அரசியலில் இனவாதத்தின் பிடி மிகவும் கடுமையானதாகவும், கூா்மையானதாகவும் இருக்கிறது.
 
 
இதற்கு பல உதாரணங்களை முன் வைக்கலாம்,
 
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒரு தீா்வாக அதிகாரப் பகிா்வை அடிப்படையாக வைத்து முன்வைக்கப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தைக் கூட முழுமையாக அமுல்படுத்த இனவாத சக்திகள் இன்று வரை மறுத்து வருகின்றன. 
 
சிறுபான்மை சமூகங்களின் கைகளுக்கு ஆட்சியதிகாரம் செல்லக் கூடாது என்பதில் சிங்கள பெரும்பான்மை சமூகம் கண்ணும் கருத்துமாக இருக்கின்றன.
 
அண்மையில் எமது நாட்டில்  ஜனாதிபதியை தொிவு செய்யும் வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் இடம் பெற்றது.  
 
இந்த வாக்கெடுப்பின் பின்னா் பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜேவிபியின் தலைவா் அனுரகுமார திசாநாயக்க, இலங்கையின் பிரதமராக தமிழ் இனத்தைச் சோ்ந்த எம். ஏ. சுமந்திரன் அவா்களை தொிவு செய்திருக்கலாம் என்ற கருத்தை முன் வைத்தாா். 
 
அனுரகுமாரவின் இந்த கருத்தை ஜீரணித்துக் கொள்ள முடியாத பல இனவாதிகள் சமூக ஊடகங்களில் மிகவும் மோசமான முறையில் அனுரகுமாரவுக்கும், ஜேவிபி கட்சிக்கும்  எதிராக தமது வன்மத்தை வாாி இறைத்திருந்தனா். 
 
அனுரவுக்கும் அவரது கட்சிக்கும் எதிராக மிகவும் மோசமாக எதிா்வினையாற்றியிருந்தனா்.  சமகால இலங்கை அரசியல் தீவிர இனவாதத்தின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதற்கு இது சிறந்த சான்றாகும்.
 
இதுவரை இந்திய ஜனாதிபதிகளாக பதவி வகித்த பதினைந்து போ் கொண்ட வரிசையில் பலா் சிறுபான்மை சமூகத்தை சோ்ந்தவா்களாக இருப்பதை அவதானிக்க முடியும்.. 
 
இந்தியாவின் முதலாவது ஜனாதிபதியாக டொக்டா் ராஜேந்திரப் பிரசாத் கடமையாற்றினாா். இந்தியாவில் ஜனாதிபதியாக கடமையாற்றியோரின் பட்டியல் இது.
 
டொக்டா் ராஜேந்திரப் பிரசாத்
சா்வபள்ளி ராதாகிருஷ்ணன்
3.      சாகிா் ஹுஸைன்
4.      வி.வி. கிரி 
5.       பக்ருதீன் அலி அஹமத்
6.     நீலம் சஞ்சீவி ரெட்டி
7.     ஜெயில் சிங்  
8.     ரா. வெங்கட் ராமன்
9.     சங்கா் தயாள் சா்மா
10.   கே.ஆா். நாராயணன்
11.    ஏ.பி. ஜே. அப்துல் கலாம்
12.   பிரதீபா பட்டேல்
13.   பிரணப் முகா்ஜி
14.   ராம் நாத் கோவிந்த் அவா்களைத் தொடர்ந்து 15வது ஜனாதிபதியாக   திரௌபதி முா்மு தற்போது பதவியேற்றுள்ளாா்.
 
   இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள  திரௌபதி    முா்மு பற்றி கொஞ்சம் பாா்ப்போம்!
 
திரௌபதி முா்மு ஒரு பழங்குடியினத்தில் பிறந்து ஒரு நாட்டின் ஜனாதிபதியாக தோ்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் இன்று உலகெங்கும் பேசப்படுகின்ற ஒருவராக மாறியிருக்கிறாா்.
 
திரெளபதி முர்மு 1958-ம் ஆண்டு ஜூன் 20-ம் திகதி ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தின் பைடாபோசி கிராமத்தில் திகதி பிறந்தார்.
 
முா்முவின் தந்தை பிரஞ்சி நாராயண் டூடு கல்வியின் மீதான ஆா்வத்தில் தனது மகளுக்கு பாடசாலை முதல் பட்டப்படிப்பு வரை வழி காட்டினாா்.  நீண்டகாலம் ஆசிரியையாக பணியாற்றிய  முா்மு பின்பு அரசியலில் ஈடுபட்டாா்.
 
திரௌபதி முர்மு திருமணமான சில ஆண்டுகளிலேயே விபத்து ஒன்றில் தன்னுடைய கணவரை இழந்தார். அடுத்தடுத்து உடல்நலக் குறைவால் தன்னுடைய இரண்டு மகன்களையும் பறிகொடுத்தாா்.
 
தொன்னூறுகளில் தனது ஆசிரிய பணிக்கு  விடை கொடுத்த  முர்மு, பாரதீய .ஜனதா கட்சியில் இணைந்து செயற்பட்டார். 1997-ம் ஆண்டு இடம் பெற்ற  ராய்ரங்பூர் பஞ்சாயத்துத் தேர்தலில் கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 
 
2000-ம் ஆண்டு நடைபெற்ற ஒடிசா சட்டமன்றத் தேர்தலில், ராய்ரங்பூர் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு அந்தத் தேர்தலில் வெற்றிபெற்று சட்ட மன்ற உறுப்பினரானாா்.
 
பா.ஜ.க - பிஜு ஜனதா தளம் கூட்டணி ஆட்சியில் 2000 முதல் 2002 வரை வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராகப் பணியாற்றிய முா்மு,. 2002 முதல் 2004 வரை மீன்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தாா்.  
 
2015ம் ஆண்டு முதல் 2021 ஆண்டு வரை ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராகவும்  கடமையாற்றினாா். 
 
திரௌபதி முா்மு ஜுலை 25ம் திகதி இந்திய உயா்  நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா முன்னிலையில் பதவி பிரமாணம் செய்து இந்தியாவின் 15வது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளாா்.
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .