Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2024 ஏப்ரல் 17 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் பாதுஷா
இதயத்துடிப்பு கண்காணிப்புக் கருவியின் வாசிப்பைப் போல தேர்தல் பற்றிய பேச்சுக்கள்; ஏற்ற. இறக்கங்களாக சென்று கொண்டிருக்கின்றன. முஸ்லிம் கட்சிகளும் அரசியல்வாதிகளும் மக்களும் எந்தத்; தேர்தலையும் எப்படி எதிர்கொள்வது என்ற எந்த திட்டமிடலும் முன்னேற்பாடும் இல்லாமல் இருப்பதை தௌ;ளத்தெளிவாக காண முடிகின்றது.
கணிசமான முஸ்லிம் அரசியல்வாதிகள், பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் மட்டுமன்றி அவர்களது நேரடி அரசியல் வாழ்வும் காலாவதியாகும் நிலைக்கு வந்திருக்கின்றது. அவர்கள் நீண்டகாலமாக பதவியில் இருந்தார்கள் என்பதால் மட்டும் இந்நிலைமை ஏற்படவில்லை. மாறாக, பதவியில் இருந்த காலத்தில் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்பதாலும் ஆகும்.
தோல்விப் பயம் ஆட்கொள்ளத் தொடங்கியுள்ளது. எதனைச் சொல்லி, எவ்வாறு மக்களை ஏமாற்றி மீண்டும் பதவிக்கு வரலாம் என்று பல முஸ்லிம் எம்.பி.க்கள் மண்டையைப் போட்டு பிய்த்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கான வழி அவர்களுக்கும் தெரியாது, அவர்களுடன் இருக்கின்ற அல்லக் கைகளுக்கும் புரியாது.
ஆகவே, தேசிய அரசியல் நகர்வுகளின் காரணமாக தேர்தல் இன்னும் தாமதமடைந்து கொண்டிருப்பது அவர்களுக்கு ஒரு ஆறுதலை தந்திருக்கின்றது என்று கூறலாம்.
முதலில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதே சட்டத்தின் நியதி என்றாலும் கூட, முதலில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் ஒருதரப்பில் முன்வைக்கப்படுகின்றன. இரண்டு தேர்தல்களையும் ஒருசேர நடத்துதல் பற்றியும் பேசப்படுகின்றது.
அதிகாரத்தில் அதாவது, ஆளும் தரப்பில் இருக்கின்ற எம்.பி.க்களுக்கு ஜனாதிபதித் தேர்தல் தேவைப்படுகின்றது. எதிரணியில் உள்ளவர்கள் மற்றும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வெளியில் காத்துக் கொண்டு நிற்பவர்களுக்கு பொதுத் தேர்தல் அவசியப்படுகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலை முதலில் நடத்த விரும்புவதாக வெளியில் காட்டிக் கொண்டாலும், நாடாளுமன்ற தேர்தல் முதலில் நடந்தால் அதனை எதிர்கொள்வதற்கான 'பிளான் பீ' யும் அவரிடம் இருப்பதாகவே தெரிகின்றது. இந்த வியூகத்தை ஏனைய பெரும்பான்மைக் கட்சிகளும் கொண்டுள்ளன.
ஆனால், முஸ்லிம் கட்சிகளிடமோ முஸ்லிம் தலைவர்கள் மற்றும் எம்.பி.க்களிடமோ எந்த உருப்படியான யோசனையும் இருப்பதற்கான அத்தாட்சிகள் வெளிப்படவில்லை. எந்த பெரும்பான்மைக் கட்சியை ஆதரிப்பது, என்ன அணுகுமுறையைக் கையாள்வது, அதனால் சமூகத்திற்கு என்ன நன்மை கிடைக்கும் என்ற திட்டமிடல் அவர்களிடம் இல்லை.
முஸ்லிம் பொது மக்களின் நிலையும் இதுதான். நமது ஊரின், நமது மாவட்டத்தின் தற்போதைய எம்.பி.க்கே தொடர்;ந்தும் வாக்களிக்க வேண்டுமா? அவ்வாறு அவர்கள் இந்த சமூகத்திற்கு என்ன செய்திருக்கின்றார்கள்? என்ற மீள்வாசிப்பொன்றை சமூகம் செய்யவில்லை. அடுத்த தேர்தலில் நமது தெரிவு யார் என்று ஆழமாக சிந்திக்கவும் இல்லை.
புpரதான முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள். எம்.ப்p.க்கள் உள்ளடங்கலாக அனைத்துக் கட்சிகளையும் பிரதிநிதித்துவம் செய்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் இச் சமூகத்திற்கான அரசியலை, தவணை முறையில் கெடுத்துக் கெடுத்துக் கடைசியில் குட்டிச்சுவராக்கி இருக்கின்றார்கள் என்பதுதான் கசப்பாள உண்மையாகும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் மற்றும் உதிரி முஸ்லிம் கட்சிகளும் ஒவ்வொரு தனிப்பட்ட முஸ்லிம்
16 minute ago
24 minute ago
40 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
24 minute ago
40 minute ago
46 minute ago