2025 ஒக்டோபர் 20, திங்கட்கிழமை

நீங்கள் தனிமையில் இல்லை

R.Tharaniya   / 2025 மே 19 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த சில மாதங்களாக, இலங்கையில் நாடாளாவிய ரீதியில், சமூகங்களைக்கடந்து, துயர் அலைகளைத் தோற்றுவிக்கும், துயர்மிகும் பதின்ம வயது தற்கொலை அதிகரிப்பைக் காணக்கூடியதாகிறது.

இத் துயர் மிகு இழப்புகள் குடும்பங்களைச் சின்னாபின்னமாக்கி,சமூகங்களை இதற்கான விடிவைத் தேடவைத்துள்ளது. இந்த நெருக்கடி நிலையை நாம் ஒன்றாக எதிர்கொள்ளும் போது நிலைமையைக் கவனித்து,திறந்தமனத்துடன் வழிகளைத்தேடி,பாதிக்கப்படக்கூடிய இளையோருக்கானஉதவிகளைச் செய்து கொடுக்க வேண்டும்.

SH நெருக்கடியை புரிந்துகொள்ளல்

பதின்ம வயது தற்கொலைகள் பின்வருவன உள்ளடங்கலாக, பல காரணிகளில் இருந்து தோன்றுகின்றன

  1. கல்வி முறை நெருக்கடியும் பரீட்சை மன அழுத்தமும்.
  2. குடும்பத்தகராறுகளும் வீட்டு கஷ்டங்களும்
  3.  சமூகத்தனிமைப்படுத்தலும் கொடுமைப்படுத்தலும்
    ( இணையவழி கொடுமைப்படுத்தல் உட்பட)
  4. மனஅழுத்தம்,கவலை,போன்ற சுகப்படுத்தாத மன நல நிலைமைகள்.
  5. அதிர்ச்சிகரமான சம்பவங்களுக்கு முகம்கொடுத்தல்
  6.  குடும்பத்தைதாக்கும் பொருளாதார நிலைமைகள்
  7. முன் மாதிரி தற்கொலை (பிரதி நடவடிக்கை)

இந்த அழுத்தங்களின் கூட்டும், குறிப்பாக, இலங்கையின் சவாலான பொருளாதார நிலைமைகளும் நீடிக்கும் சர்வதேச நோய்ப்பரவலும் இளையோர் மன நலத்தில் புயலை உண்டாக்கியுள்ளது.

SH கவனிக்க வேண்டிய எச்சரிக்கைக்குறிகள்

பெற்றோர்கள், ஆசிரியர்கள், பாடசாலை நிர்வாகத்தினர், நண்பர்கள் இந்த அறிகுறிகளுக்கு விழிப்புடன் இருக்கவேண்டும்.

  1.  முன்பு ஈடுபட்ட நடவடிக்கைகளிலிருந்து பின்வாங்குதல்.
  2.  உணவு உட்கொள்ளல், நித்திரைசெய்தல்  என்பவற்றில்  மாற்றம்.
  3.  நம்பிக்கையின்மை, மதிப்பின்மை பற்றிய பேச்சும்,பிறருக்கு சுமையாக இருப்பதான் எண்ணமும்.
  4.  மதிப்புள்ள தன் பொருளை பிறருக்கு கொடுத்தல்.
  5.  தனிமையிலிருத்தல்  அதிகமாவதும், அடிக்கடி மன நிலைமாறுதலும்.
  6.  இறத்தல்,தற்கொலை செய்தல் என்பது பற்றி பேசிக்கொள்ளல்.
  7.  கல்வி செயற்பாடுகளில் குன்றுதல்.
  8.  ஆபத்துகளில் ஈடுபடுதல் அதிகரித்தல்.   
  9. மௌனத்தைக்  கலைத்தல்

திறந்த மனத்துடன் பேசுதல்,தற்கொலையைத் தடுப்பதில்,பயனுள்ள வழிகளில் ஒன்று. பொதுவான தவறான கருத்துக்குமாறாக, தற்கொலைப்பற்றி பேசுதல் ஒருவர் மனத்தில் தற்கொலை எண்ணத்தை உண்டாக்காது.

அதனிடத்தில் அமைதியாக துன்பப்படுவருக்கு, உதவி உண்டெனக்க காண்பித்து நிம்மதியைக் கொடுக்கும்.

SH உதவிக்கான வழங்கள்

உங்களுக்கு அல்லது நீங்கள் அறிந்தவருக்கு தற்கொலை எண்ணங்கள் உண்டாயின், உடனடியாக பின்வரும் உதவிச் சேவைகளை தொடர்புகொள்ளுங்கள்.

மன நலதேசிய நிறுவனம்  - 1926

CCLine  1333 (வருடத்தில் 365 நாள்களும், 24/7 மணிநேரமும்,மும் மொழிகளிலும்  இயங்கும், இரகசியம் பேணப்படும், இலவசநெருக்கடிஉதவிச்சேவை)

சுமித்ரயோ 011-2692909, 011-2696666

மேலதிக இளையோர் உதவி வழங்கள்:

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை 1929

இளையோருக்குஉதவுதல்

இளையோர் பாதுகாப்பாகவும், மதிக்கப்படுவதாகவும், புரிந்துகொள்ளப்படுவதாகவும்,  உணரும் வகையான சூழலை ஏற்படுத்துவதற்கு, சமூகம் என்ற வகையில் நாம்  ஒன்று சேர்ந்து செயற்படவேண்டும்.

பாடசாலைகளில் மன நலவிழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலமும், பெற்றோர் பிள்ளைகளுடன்  மனந்திறந்து பேசுவதன் மூலமும், சமுதாயம் மனநல உதவிபெறுவதைக் களங்கமானது எனக்கொள்ளாது.

CCCline's "let’sTALK" நிகழ்ச்சி

இலங்கை முழுவதும் 365 நாள்களும் 24 மணிநேரமும் மும் மொழிகளிலும்  "let’sTALK"என்னும்  வசதியை வழங்குவதில் பெருமை கொள்கிறது. இது இளையோருக்கு உளவியல்  ரீதியில் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்கான விசேட நிகழ்ச்சித்திட்டம். அவுஸ்திரேலிய தற்கொலைத்தடுப்பு முறைமையின் அங்கீகாரம் பெற்ற,

அழைப்பை ஏற்படுத்துவோருக்கு இரகசியம் பேணும் மூலம்  CCCline பாடசாலைகளுக்கும், இளையோர் குழுக்களுக்கும் உதவிவழங்குகிறது. கல்வி நிலையங்களுக்கும், சமூகஅமைப்புகளுக்கும், நடைமுறை உத்திகளைத் தந்துதவி இளையோர் தம் மனநல பிரச்சனைகளை அலசியராய்ந்து அவர்களை மற்றையோர் கண்டு, கேட்டு மதிப்பளிக்கும்  சூழலை உருவாக்கும்.

"let’sTALK" நிகழ்ச்சியைநடாத்தவிரும்பும் பாடசாலைகளும் இளையோர் அமைப்புகளும் CCCline'  0112633237 ஃ0777875555  என்னும் இலக்கத்தினுடாக இந்தஉயிர்காக்கும் செயலைப் புரிந்துகொள்ளும் நிகழ்வைதங்கள் சமூகத்தின் நன்மைக்காகஒழுங்குசெய்யமுடியும்.

தொண்டர் சந்தர்ப்பங்கள்

உணர்வுபூர்வநெருக்கடியில் உள்ள பிறருக்குஉதவுவதன் மூலம் சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த நீங்கள் விரும்புவீர்களாயின்,உங்கள் தொண்டு உதவியை CCC Line  வரவேற்கிறது.

பயிற்றப்பட்ட எமது நெருடி நிலை உதவியாளர் குழுவுடன்  இணைவதன் மூலம், தேவைப்படுவோருக்கு, முக்கிய உணர்வுபூர்வ உதவியை நீங்கள் செய்யமுடியும்.

தொண்டு செய்யும் சந்தர்ப்பங்களை மேலும்  தெரிந்து கொள்ளவும், இலங்கையில் தற்கொலைத் தடுப்பு முயற்சியில் பங்குகொள்ளலாம் என அறிந்துகொள்ளவும் 0112633237 என்னும்  இலக்கத்தில் CCC Line.க்குஅழைப்பை ஏற்படுத்துங்கள்.    

பதின் மவயதினருக்கான ஒரு செய்தி

மனதிலே போராட்டமா? நம்பிக்கையின்மை உணர்வு தற்காலிகமானது. தற்கொலை அதற்கு நிரந்தர தீர்வாகாது. உங்கள் வாழ்வு மிகமதிப்புள்ளது. உங்கள் மீது மிகுந்த அக்கறை உள்ளவர்களும்  உங்களுக்கு உதவுவர்களும் இருக்கிறார்கள். உதவுதலுக்கு துணிவு வேண்டும். அதுவே நன்றாக உணர்வதற்கான முதல்  அடி .

உங்கள் பிரச்சனைகள் இப்பொழுது எவ்வளவு பெரிதாகத் தோன்றினாலும் அவற்றிற்கு தீர்வு உண்டு. உங்களுக்கு கஷ்டகாலத்தில் உதவ பலர் தயாராக உள்ளார்கள். உங்கள் பிரச்சனைகளில் நீங்கள் தனிமையில் இல்லை. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .