A.P.Mathan / 2012 மே 14 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
முதல்வர் ஜெயலலிதா பதவியேற்று ஒரு வருடம் நிறைவடைகிறது. அவர் தலைமையிலான அ.தி.மு.க. அரசு தனி பலத்துடன் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்துள்ளது. 150 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. "நிதி நெருக்கடியில் தமிழகத்தை தி.மு.க. அரசு தத்தளிக்க வைத்து விட்டது" என்று குற்றம் சாட்டியது. அதை சீர்திருத்துகிறோம் என்று கூறி சில நிதிநிலை சீர்திருத்தங்களை மேற்கொண்டது. அரசு நிர்வாகம் என்று எடுத்துக் கொண்டால் காவல்துறையில் பெரும் மாற்றங்களை செய்து நிலஅபகரிப்பு புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தது அ.தி.மு.க. அரசு. தமிழகம் முழுவதும் பெரும்பாலான தி.மு.க.வினரே அந்த புகார்களில் சிக்கினார்கள். இதன் மூலம் காவல்துறையில் இருப்போர் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதற்கே செயல்படுவார்கள் என்று முதல்வர் திரும்பத் திரும்ப அறிக்கை விட்டார். "சட்டத்தின் ஆட்சி" என்பது இந்த முறை மட்டுமல்ல, ஒவ்வொரு முறை ஆட்சிக்கு வரும் போதும் அ.தி.மு.க.வின் முழக்கமாகவே இருந்து வந்தது. 2 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago