A.P.Mathan / 2012 மே 28 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழகத்தில் "பெற்றோல் அரசியல்" களைகட்டியிருக்கிறது. ஒரு லீற்றர் பெற்றோல் 7 ரூபாய் 50 காசுகளுக்கு மேல் அதிரடியாக உயர்த்தப்பட்டது நடுத்தர மக்களை வாட்டி வதைக்கின்ற அதேவேளையில் அரசியல் கட்சிகளுக்கு தங்கள் போராட்ட யுக்திகளை வகுத்துக் கொள்ளவும் வழி வகுத்துள்ளது. அகில இந்திய அளவில் காங்கிரஸுடன் கசப்புணர்வுடன் இருக்கும் திரினாமூல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜி ஐந்து கிலோ மீற்றர் நடந்து சென்று பெற்றோல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தி முடித்து விட்டார். மேற்கு வங்கத்தில் இப்படியென்றால், தமிழகத்திலோ காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியான தி.மு.க. 30ஆம் திகதி மிகப்பெரும் போரட்டத்தை நடத்துகிறது. அதில் ஜூன் மூன்றாம் திகதி 89 வயதில் அடியெடுத்து வைக்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதி கலந்து கொள்கிறார். அது தவிர, அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க. ஸ்டாலின் ஆகிய முக்கிய தலைவர்களும் ஆங்காங்கே இந்த அறப்போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். மம்தாவின் போராட்டத்திற்கு அம்மாநில காங்கிரஸ் கட்சி, "முடிந்தால் மத்திய அரசை விட்டு விலக்கட்டுமே" என்ற ரீதியில் கருத்துச் சொன்னாலும், தமிழகத்தில் தி.மு.க.வின் போராட்டம் பற்றி காங்கிரஸ் கட்சி மௌனமாகவே இருக்கிறது. அக்கட்சியின் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் மட்டும் ஒரு டிவி பேட்டியில் "எங்களுடன் இருக்கும் கூட்டணிக் கட்சிகளும் போராட்டம் நடத்துகின்றன" என்று மட்டும் லைட்டர் வெயினில் பேசியிருக்கிறார்.6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago