2025 மே 20, செவ்வாய்க்கிழமை

அதிகார பரவலாக்கல் தொடர்பான தற்போதைய சிந்தனைகளை உடைத்தல்

Super User   / 2011 ஓகஸ்ட் 25 , பி.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மிழ் தேசிய கூட்டமைப்பின், அதிகாரப்பகிர்வு தொடர்பிலான எழுத்து மூல ஆலோசனைகளை ஆராய்ந்து முன்கூட்டியே ஒவ்வொன்றாக கருத்துக் கூறவுள்ளதாக சில சமிக்ஞைகளை அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு காட்டியுள்ளதா அல்லது இது கூட்டமைப்பின் தவறான விளக்கமா என்பது பற்றி யாரும் எதையும் நிச்சியமாக கூறமுடியாது.

அரசாங்கம் ஒவ்வொன்றாகக் கருத்துக் கூறவுள்ளது உண்மையாயின் தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தைக்கு திரும்புவதற்கான நிபந்தனைகளை தெரிவித்திருக்கும் நிலையில் இதற்கான பதிலை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும். இல்லையாயின் தமிழ் தேசிய கூட்டமைப்ப அதன் தற்போதைய நிலைப்பாட்டை மீளப்பரிசீலனை செய்ய வேண்டியிருக்கும்.

எவ்வாறாயினும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இலங்கை தமிழ் சமுதாயத்தினருக்குக் கூட ஏகப் பிரதிநிதி அல்லவென்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இருந்து வருகின்றது.  இந்ந நிலையில் கிழக்கு மாகாண தமிழர்களை விட்டுப்பார்த்தாலும் தமிழ் பேசும் ஏனைய மக்களான முஸ்லிம்கள், மலைநாட்டுத் தமிழர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதித்துவம் செய்வதைப் பற்றி கற்பனை செய்யவும் முடியாது. யதார்த்த நிலைமைகளின் பின்னணியில் இதை தமிழ் தேசிய கூட்டமைப்பு மறுக்க முடியாது.

இலங்கைத் தமிழர்கள் எக்காலத்திலும் மலைநாட்டுத் தமிழர்களை சம அந்தஸ்த்துள்ளவர்களாக நடத்தவில்லை. முஸ்லிம்கள் எல்.ரீ.ரீ.ஈ.யினரால் மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னும் இவர்களுடன் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படவில்லை.

கிழக்கு மாகாணம் உட்பட இலங்கைத் தமிழர்கள் பெரும்பான்மையாகவுள்ள பிரதேசங்களில் 2010 ஜனாதிபதி தேர்தல் உட்பட அண்மையில் நடந்த நான்கு தேர்தல்களிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்ஸ்தானம் நிறுவப்பட்டுள்ளது. இருப்பினும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கௌரவமான அளவுக்கு வாக்குகளை பெற்றுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு யாழ்ப்பாணம் குடாநாட்டுக்கு வடக்கேயுள்ள தீவுகளில் வெற்றி பெறுவதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களும் பரந்துப்பட்ட தமிழர் அபிலாஷைகள் மீது அனுதாபம் கொண்டவர்களும் காரணங் கூறுகின்றனர். வடக்கில் சமூக ரீதியில் இது கூறும் மறைபொருள் என்னவென்பதை வடக்கு தமிழ் அரசியலுடன் நன்கு பரிச்சயமானவர்கள் மட்டுமே அறிவர். எல்.ரீ.ரீ.ஈ. முதலில் முஸ்லிம்களை இழந்தது. பின்னர் கிழக்கு தமிழர்களை இழந்தது. எஸ்.ஜே.வி. இவ்வாறு தமிழர் ஒற்றுமைக்காக உழைக்கவில்லை.

அரச அதிகாரத்தை பயன்படுத்தல், துஷ்பிரயோகம் செய்வதுப்பற்றி தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுவதில் உண்மையுள்ளது. இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் இனத்துவத்தை மையமாக கொண்ட பிரசாரம் பற்றி அரசாங்கம் கூறுவதிலும் உண்மையுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமன்றி, பொதுவாக தமிழர்கள், இனப்பிரச்சினை தொடர்பில் சிங்கள பெரும்பான்மை அரசாங்கங்கள் கடந்த காலங்களில் ஒப்புக்கொண்ட விடயங்களை தருவதில்லை என குறை காண்கின்றனர். இந்த கருத்தில் உண்மையுண்டு. தலைமைகள் ஒப்புக்கொண்ட விடயங்கள் முழு சிங்கள பகுதிகளில் காணப்பட்ட யதார்த்தங்களுடன் இணைந்து போகாமல் இருந்திருக்கலாம்.

கொடுப்பதாக கூறியதை பின்னர் மறுப்பதைவிட அவசரப்பட்டு ஏதும் வாக்குறுதியை அளிக்காமல் இருப்பதே நல்லது. தமிழர்களுக்கு அதிகம் கொடுத்துவிட்டார் எனக் கருதி அப்போது பிரதமராகவிருந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவை ஒரு இளம் புத்த பிக்கு சுட்டுக்கொன்றமை ஒரு பாடமாக இருக்கவேண்டும். தமிழ் தலைவரான எஸ்.ஜே.வி. செல்வநாயகத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை பண்டாரநாயக்கவினால் நிறைவேற்ற முடியவில்லை.

முற்றுமுழுதாக பகையென்று கூறாவிட்டாலும் பரஸ்பர சந்தேகம் பல நூற்றாண்டுகள் வரலாற்றை கொண்டது. தமிழர்கள் துட்டகைமுனுவை இன்னும் மன்னிக்கவில்லை. இராஜராஜ சோழனால் ஆளப்பட்ட வரலாற்று உண்மையை சிங்களவர்களாலும் தாங்க முடியாதுள்ளது. இராஜராஜ சோழன் ஆயிரம் வருடங்களுக்கு முன் தமிழ்நாட்டை ஆண்ட மன்னனானவன். இலங்கை தமிழ் அரசனான எல்லாளனை துட்டகைமுனு தோற்கடித்தமை இதற்கு ஆயிரம் ஆண்டுகள் முந்தியதாகும்.

பரஸ்பர சந்தேகமின்றி ஏற்புடைய ஓர் அரசியல் தீர்வை எட்டுவதற்கு சிங்களவர்ளும் தமிழர்களும் அந்த பழைய காலத்தைவிட்டு வெளியே வரவேண்டும். முற்சாய்வுகளைக் கொண்ட சிந்தனைகள் சமுதாயத்தை அழித்துவிட்டன. அமைதியை குழப்பிவிட்டன. இயற்கை வளங்கள் கொண்ட நாட்டை நாசமாக்கி விட்டன.

சென்னையில் சிங்கள யாத்திரிகர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்ததன் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சரியான நடவடிக்கையை எடுத்தார். தமிழ் நாட்டில் அல்லது இந்தியாவில் இருந்த தமிழர்களுக்கு மட்டுமன்றி, தமிழ் பேசும் மக்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு ஆதரவளித்த இராஜராஜ சோழனினால் சிங்கள சிந்தனை கட்டுப்படுத்தப்படுகிறது.

மறுதலையாக, இந்திய தமிழர்கள் இலங்கைக்கும் சிங்களவர்களுக்கும் எதிரான காழ்ப்புணர்வுகளை கொண்டுள்ளனர். இதன் வெளிப்பாடே அப்பாவி யாத்திரீகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும். இந்திய தமிழ் அரசியல்வாதிகள் இலங்கையிலிருந்து வந்திருந்த நாடாளுமன்ற தூதுக்குழுவை பகிஷ்கரித்தனர்.

9 பேர் கொண்ட இந்த தூதுக்குழுவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உட்பட நான்கு தமிழ் பேசும் உறுப்பினர்களும் இருந்ததை இவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.

தமது பெயரில் வேறு இடங்களில் தோன்றியுள்ள ஆபத்தான போக்குகள் தமக்கே தீங்கானவை என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பும் இலங்கையிலுள்ள தமிழர்களும் அறிந்துகொள்ள வேண்டும். சென்னையில் சிங்கள யாத்திரிகர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலும் ஹோட்டல்களில் அவர்களுக்கு தங்குமிட வசதிகள் மறுக்கப்பட்டன என்ற வதந்திகளும் கவனிக்கப்பட வேண்டியவையாகும்.

(தமிழில்: ந.கிருஷ்ணராசா)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X