Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 செப்டெம்பர் 19 , பி.ப. 07:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்பார்க்கப்பட்ட விதமாகவே இலங்கை ஊடகங்கள் பிளேக்கின் வருகையை அவநம்பிக்கையுடனேயே நோக்கின. ஆயினும் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளரான ரொபேர்ட் ஓ பிளேக் - இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில் முன்னுரிமைகளை மாற்றி அமைத்திருக்கலாம்.
அரசாங்கம் கூறுகின்ற புனர்வாழ்வு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்கின்ற அரசியல் தீர்வு என்பவற்றை கருத்திற்கொண்டு அவர் இரு தரப்பினரதும் பிரச்சினைகள், கவலைகள் பற்றி தனக்கான ஒரு நிலைப்பாட்டை ஏற்படுத்தியிருக்கலாம்.
ஏனைய பிரச்சினைகளை மறக்குமளவுக்கு யுத்தக் குற்றம் பற்றி சர்வதேச சமூகம் தோற்றுவித்துள்ள ஆர்ப்பரிப்புகளுடன் ஒப்பிடுகையில் இது நல்ல விடயமாகும். அமெரிக்கா அதைத் தர்க்கரீதியாக தொடர்ந்துகொண்டு போகுமா என்பதை ஜெனிவாவில் இனிவரும் நாட்களில் நடப்பதைக்கொண்டே கூறமுடியும்.
அவ்வாறாயின் ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கி மூன் நியமித்த நிபுணர் குழு வழங்கிய அறிக்கை பற்றிய விவாதத்தை அமெரிக்கா ஒத்திப்போட வேண்டியிருக்கும். ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தில் அடுத்த வருடம் செப்டம்பர் அளவிலேயே இலங்கை பிரச்சினையை எடுக்கலாம் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கூறுகிறார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை தருவதாக அரசாங்கம் கூறியுள்ளது. இப்போது நவம்பர் மாதத்தில் இந்த அறிக்கையை வெளியிடவுள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது. இந்த அறிக்கை தொடர்பிலான பாரிய வேலையின் தன்மை காரணமாக மேலும் கால அவகாசம் கோரினாலும் குறை சொல்ல முடியாது. இருந்தாலும் அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு அளித்துள்ள வாக்குறுதியை கருத்திற்கொள்ளும்போது அரசாங்கம் இழுத்தடிப்பு செய்வது அல்லது தந்திரோபாயங்களை பயன்படுத்துவது தீங்கானதாகும்.
பிளேக்கின் அண்மைக்கால வருகைக்கும் மே மாத வருகைக்குமிடையில் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஜெனிவா அமர்வு நடக்கின்றவேளையில் பிளேக் வருகை தந்தமை அமெரிக்க எதிர்ப்பாளர்களின் வெறுப்பை சம்பாதித்துள்ளது. நிபுணர்குழுவின் அறிக்கையை செயலாளர் நாயகம் பான்கி மூன் மனித உரிமைக் கவுன்ஸிலுக்கும் மனித உரிமைகளுக்கான ஐ.நா. ஆணையாளருக்கும் மேல் நடவடிக்கை எடுப்பதற்காக அனுப்பியுள்ளமையும் அவர்களின் சந்தேகத்தை தூண்டியுள்ளது.
நிபுணர் குழு அறிக்கையை பாதுகாப்பு சபைக்கு அனுப்பினால் நிபுணர் குழு அமைக்கப்பட்டமை பற்றி பல கேள்விகள் எழலாம் என்பதனால்தான் செயலாளர் நாயகம் பாதுகாப்பு சபைக்கு அனுப்பாமல் மனித உரிமைகள் கவுன்ஸிலுக்கு அனுப்பியதாக குறை காணப்படுகிறது. பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரமுள்ள இலங்கையின் நட்பு நாடுகளான சீனாவும் அமெரிக்காவும் என்ன செய்யப் போகின்றன என்பதையும் இவ்வாரம் நடைபெறவுள்ள பொதுசபை கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்ன செய்யவுள்ளார் என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஆரம்பத்திலிருந்தே இலங்கை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையுடன் பிரச்சினை இருந்து வருகின்றது. தனிப்பட்ட விடயமான இப்பிரச்சினை, செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழு முன்வைத்துள்ள பிரச்சினைகளிலிருந்து வேறுபட்டதாகும் தற்போதைய தொடர் செயற்பாடுகள் எங்கே போய் முடியும் என்பது பற்றிய கொழும்பின் தயக்கத்தையும் கவனத்தில் எடுக்க வேண்டும். இலங்கையில் அமெரிக்கத் தூதுவராகக் கடமையாற்றிய அநுபவத்தின் காரணமாக பிளேக் தனது கருத்து வெளிப்படுத்தல்களை குறித்த விடயங்களுக்குள் மட்டுப்படுத்தியிருந்தார். வடக்கில் ஒரு நாள் விஜயத்தை மேற்கொண்ட அவர், அங்கு தொடர்ந்தும் துணைப்படையினர் காணப்படுவதை சுட்டிக்காட்டியுள்ளார். ஆயுதங்களுடன் இவர்கள் காணப்பட்டதாக இவர் கூறவில்லை. ஆனால் ஆளும் கூட்டணியில் உள்ள ஈ.பி.டி.பி.யின் துணைப்படை பற்றி குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் டக்ளஸ் தேவானந்தா இதை உடனடியாக மறுத்துள்ளார். 2006இல் ஜெனீவா பேச்சுவார்த்தையிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் வெளிநடப்புச் செய்தபோது அரசாங்கம் துணைப்படைகளை சுதந்திரமாக செயற்பட அனுமதித்திருந்ததை சுட்டிக்காட்டியது. அதே வருடம் நடந்த முதலாவது சுற்றுப்பேச்சுவார்த்தையின்போது அரசாங்கம் துணைப்படைகளை இல்லாமல்ச் செய்லவதாக கூறியிருந்தது.
அரசாங்கத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குமான பேச்சுவார்த்தை மீண்டம் தொடங்கவுள்ளதை அறிவிக்க பிளேக் வரவேண்டுமா என இலங்;கையர்கள் தம்மைத்தாமே கேட்டுக்கொள்ள வேண்டும். இதே கேள்வி பற்றி அரசாங்கம் இன்னும் கடுமையாக யோசிக்க வேண்டும். இலங்கை மக்கள் தமது பிரச்சினைகளை தாமே பேசித் தீர்;த்துக்கொள்ள வேண்டும் எனக் கூறப்படுகின்ற போதும் இவ்வாறு நடத்ந்துள்ளது. ஒன்றில் ஏதோ ஒரு வகையான சர்வதேச தலையீட்டை அரசாங்கம் எதிர்பார்த்துக்கொண்டு இருந்ததா அல்லது சர்வதேச தலையீடின்றி அரசாங்கம் செயற்பட மாட்டாதா என்ற கேள்விகள் எழுவது தவிர்க்க முடியாதுள்ளது.
தமிழ் பொலிஸின் தேவை பற்றி பிளேக் கூறியதை கவனிக்க வேண்டும். அமைச்சரான முரளிதரன் (கருணா) பொலிஸில் தமிழ் பொலிஸ், சிங்கள பொலிஸ் என இல்லையென அவசர அவசரமாக அறிவித்தார்.. ஆயினும் அரசாங்கம் யுத்தம் முடிந்த பின்னால் நியமிக்கப்பட்ட தமிழ் பொலிஸாரின் எண்ணிக்கையை வெளிப்படுத்தியது. இந்த எண்ணிக்கை மிகச் சொற்பமானதாயினும் இதற்கான காரணத்தை புரிந்துகொள்ள முடியும்.
மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்குவதற்கு பதிலாக தமிழ் பொலிஸாரை கூடுதலாக நியமிக்கும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அமெரிக்காவும் ஏனைய மேற்கத்தேய நாடுகளும் ஆதரிப்பதை பிளேக்கின் அறிவிப்பு எடுத்துக்காட்ட போலவுள்ளது. இலங்கையில் யுத்தத்துக்கு பின்னர் காணப்படுவது போன்ற உணர்வுபூர்வமான உள்நாட்டு பிரச்சினைகளை அணுகும் முறை தொடர்பில் சமூகத்தின் அறியாமை அரைகுறை விளக்கம் மற்றும் தடுமாற்றம் என்பவற்றை இது வெளிப்படுத்துவதாகவும் கொள்ளமுடியும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
6 hours ago