2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

மு.கா: ஒன்றுமில்லாமல் போகும், இரண்டுங் கெட்டான் நிலை!

A.P.Mathan   / 2012 மார்ச் 06 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 •    மப்றூக்

சில கேள்விகளுக்கு இரண்டு வகையான பதில்களே இருக்கும். 'ஆம்', அல்லது 'இல்லை'! பதில் இல்லாத கேள்விகளும் உள்ளன என்பார்கள். சரியாகக் சொன்னால் குறித்த கேள்விகளுக்கான பதில்களை நாம் அடையவில்லை என்பதே உண்மையாகும். இன்னும் சில கேள்விகளுக்கு கால காலமாக விடைகள் என நாம் நம்பிக் கொண்டிருப்பவை – பதில்களே அல்ல! புதிய விடைகள் நம்மை வந்தடையும் போது – ஆச்சரியங்களுக்குள் நாம் புதைந்து விடுகிறோம்!

அரசியலைப் போலவே அரசியல் அரங்கில் எழுகின்ற கேள்விகளும் சிலவேளைகளில் நம்மைக் குழப்பும் வகையானவை. சில கேள்விகளுக்கான பதில்கள் - இறுதியில் கேள்விகளை விடவும் குழப்பம் நிறைந்தவைகளாக மாறி விடுவதுண்டு!

அவ்வாறானதொரு கேள்விதான் இது; ஆளும் ஐக்கிய சுதந்திர முன்னணி அரசில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருக்கிறதா, இல்லையா?

'இருக்கிறது' என்று நீங்கள் கூறினால், அது – அப்பாவித்தனமான பதிலாகவே அமையும்! 'இல்லை' என்று கூறினால், நீங்கள் நையாண்டி செய்கிறீர்கள் என்று விளங்கிக் கொள்ள முடியும்!!

எவ்வாறாயினும், மேற்படி கேள்விக்குப் பொருந்தும் வகையிலானதொரு பதிலை இவ்வாறு கூறலாம்!

கேள்வி: ஆளும் ஐக்கிய சுதந்திர முன்னணி அரசில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருக்கிறதா, இல்லையா?

பதில்: இருக்கிறது ஆனால் இல்லை! இல்லை, ஆனால் இருக்கிறது!!


கறுப்பு வெள்ளைப் பார்வையில் இந்தப் பதிலானது - கோமாளித்தனமானதாகக் கூடத் தெரியலாம். ஆனால், இதுவே – மிகச் சரியான பதிலாகும் என்பதை இன்றைய அரசியலை கவனமாகப் புரிந்து கொண்டோர் ஏற்றுக் கொள்வார்கள்.

கடந்த வாரம் நிகழ்ந்த ஒரு விடயத்தின் மூலம் இதை உங்களுக்குப் புரிய வைக்க முடியும்.

 

 

 

அதாவது, கடந்த 28ஆம் திகதி செவ்வாய்கிழமையன்று அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் அம்பாறைக் கச்சேரியில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அம்பாறை மாவட்டத்தின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் அந்த மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் என – ஏறத்தாள அனைத்து அரசியல் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இதன்போது, மேற்படி பிரதிநிதிகள் தமது பிரதேசங்களில் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான முன்மொழிவுகளை அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் சமர்ப்பித்து, அதற்கான அங்கீகாரத்தினையும் பெற்றுக் கொண்டனர். இந்த நிலையில், அரசில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹசனலி சார்பிலும் 09 திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் பரிதாபம், அவை அனைத்தும் முகத்தில் அடித்தாற்போல் அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் நிராகரிக்கப்பட்டன!!

இதேவேளை, மு.காங்கிரஸ் சார்பில் அம்பாறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் எவரும் இந்தக் கூட்டத்துக்கு சமூகமளித்திருக்கவில்லை! விசாரித்துப் பார்த்ததில் - மேற்படி அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அவர்கள் எவருக்கும் உத்தியோகபூர்வ அழைப்புகள் கிடைக்கவில்லை எனத் தெரியவந்தது!

இவை மு.கா.வுக்கு அவமானமாகும்! அதுவும், மு.காங்கிரஸின் அரசியல் பகையாளியான அமைச்சர் அதாவுல்லா இணைத் தலைவராகப் பதவி வகிக்கும் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இப்படியான நிகழ்வுகள் இடம்பெற்றமையானது - இரட்டிப்பு அவமானம்தான்!

மு.கா.வின் இந்த நிலைமைக்கு – அவர்கள்தான் காரணம் என்று அவர்களுக்குள்ளேயே பேசப்படுவதுதான் இதிலுள்ள சுவாரசியமாகும்!

ஆச்சரியமாக இருக்கிறதா? அப்படியென்றால், சில விடயங்களை உங்களுக்கு உடைத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது!

அதாவது, அரசோடு – மு.காங்கிரஸ் இணைந்து கொண்ட போதிலும் அந்தக் கட்சியிலுள்ள மூத்த தலைவர்கள் சிலர் - அரசாங்கத்தை விமர்சிப்பதையும், அந்த விமர்சனங்களை அறிக்கைகளாக விடுவதையும் தொடர்ந்து செய்து கொண்டேயிருக்கின்றனர். இந்த விடயமானது ஆட்சியாளர்களுக்கு மு.கா. மீது கோபத்தினை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கோபத்தின் வெளிப்பாடுகளில் ஒன்றுதான், ஹசனலியின் அபிவிருத்தித் திட்ட முன்மொழிவுகள் நிராகரிக்கப்பட்டமையாகும்!

அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் முடிவடைந்ததன் பின்னர், கூட்டத்தில் கலந்து கொண்ட மு.கா.வின் மக்கள் பிரதிநிதிகள் சிலர் - மதிய உணவுக்காக ஒன்று கூடினார்கள். இதன்போது அவர்கள் தங்களுக்குள்; பேசிய சில கருத்துக்கள் கவனிக்கத்தக்கவை!

'ஆட்சியாளர்களால் மு.காங்கிரஸ் ஒதுக்கப்படுகிறது என்பதற்கு இன்றைய அபிவிருத்திக் குழுக் கூட்டம் மிக நல்லதொரு உதாரணமாகும். மு.கா.வுக்கு இந்த நிலை ஏற்படுவதற்கு கட்சியின் செயலாளர் ஹசனலிதான் காரணமாவார். கண்மண் தெரியாமல் அரசாங்கத்தை அவர் விமர்சித்து அறிக்கைகளை விடுவதால் ஏற்பட்ட வினைதான் - மு.கா.வுக்கு இன்று நேர்ந்த அவமானமாகும்' என்றார் அங்கு வந்த மு.கா.வின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரொருவர்! இந்தக் குற்றச்சாட்டினை அங்கிருந்த மு.கா.வின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பலர் ஏற்றுக் கொண்டதோடு, இது குறித்து அவர்களும் தங்களுக்குள் காரசாரமாகப் பேசிக் கொண்டனர்!  

இந்த இடத்தில் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் இன்னுமொரு விடயத்தினையும் கூறினார். சில மாதங்களுக்கு முன்னர் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஆட்சியாளர்களுக்குமிடையில் நடைபெற்ற சந்திப்பொன்றின் போது, ஆட்சியாளர்களில் உயர்நிலைத் தலைவர் ஒருவர் - மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இவ்வாறு கூறினாராம். அதாவது, 'மு.காங்கிரஸ் என்பது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியாகும். எனவே, அரசாங்கத்துடன் ஒத்திசைந்து, கூட்டுப் பொறுப்புடனும் மு.கா. நடந்து கொள்ள வேண்டும். அவ்வாறு முடியாது விட்டால் நீங்கள் அரசிலிருந்து வெளியேறலாம். பிரச்சினையில்லை!'

ஒரு வகையில் பார்த்தால், அந்த உயர்நிலைத் தலைவரின் கூற்று நியாயமானதே. அரசில் அங்கம் வகித்துக் கொண்டு, மு.கா.வினர் ஆட்சியை விமர்சிப்பதென்பதை ஏற்றுக் கொள்ள முடியாதுதான்! அரசாங்கம் தொடர்பில் எதிரணியினர் தெரிவிக்கும் விமர்சனங்களை விடவும், ஆட்சியில் பங்கு வகிப்போர் கூறும் விமர்சனங்கள் பாரிய கவனத்தைப் பெற்று விடுகின்றன. அவை – அரசை கடுமையாகப் பாதிக்கவும் செய்யும்!

அப்படியென்றால் அரசாங்கத்தின் பிழைகளையும், தவறுகளையும் விமர்சிக்கக் கூடாதா? என்று நீங்கள் கேட்கலாம்!

நியாயமாகப் பார்த்தால், இந்த அரசாங்கம் குறித்து விமர்சிக்கவும், விவாதிக்கவும் ஆயிரம் விடயங்கள் உள்ளன. ஆனால், அந்த விமர்சனங்களை எங்கிருந்து கொண்டு மு.காங்கிரஸின் மூத்த தலைவர்கள் வெளியிடுகின்றார்கள் என்பதே இங்குள்ள கேள்வியாகும்!

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தோடு, மு.கா.வினர் இணையும் போது என்ன கூறினார்கள்? 'நீண்ட காலமாக மு.கா. எதிரணியில் இருந்து வந்ததால், அந்தக் கட்சியின் ஆதரவாளர்களுக்கு எந்த நன்மையினையும் கட்சியால் செய்ய முடியாதுள்ளது. மேலும் ஆதரவாளர்களின் பிரதேசங்களும் அபிவிருத்தியில் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. எனவே, இந்த அரசோடு ஒத்துப் போவதன் மூலமாக அபிவிருத்திகளைப் பெற்று, எமது மக்களுக்கு எதையாவது நன்மைகளைச் செய்யலாம். அதற்காகவே அரசுடன் இணைகின்றோம்' என்றனர்.

ஆனால், அரசாங்கத்தோடு இணைந்து கொண்ட பின்னரும் கூட, மு.காங்கிரஸால் அவர்களின் ஆதரவுப் பிரதேசங்களுக்கு அபிவிருத்திகளை வழங்க முடியாதுள்ளமைதான் இங்கு கவலைக்குரிய விடயமாகும்!
ஏற்கனவே, மு.காங்கிரஸ் மீது – ஆட்சியாளர்களுக்கு நம்பிக்கையில்லை. காரணம், மு.கா. குறித்து பல கசப்பான அனுபவங்கள் இந்த அரசுக்கு உள்ளன.

மஹிந்த ராஜபக்ஷவினுடைய கடந்த ஆட்சியில் இணைந்து கொண்ட மு.காங்கிரஸானது, அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்து விட்டு, அரசிலிருந்து வெளியேறியது. நல்ல காலமாக, அந்த வரவு செலவுத் திட்டத்தை ஜே.வி.பி. ஆதரித்ததால், ஜனாதிபதி மஹிந்த தப்பினார்!

பிறகு வந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவுக்கு எதிராக சரத்பொன்சேகவுடன் கைகோர்த்தது மு.காங்கிரஸ்!

இப்படி – நிறையவே பட்டியலிடலாம்.

எனவே, 'நாங்கள் முன்னர் போல துரோகம் செய்ய மாட்டோம். உங்களுடன் நாங்கள் உளப்பூர்வமாக இணைந்துள்ளோம். எங்களை நீங்கள் நம்பலாம்' என்பதை அரசுக்கு மு.காங்கிரஸ் நிரூபித்துக் காட்ட வேண்டிய தேவை உள்ளது! அதுவரை மு.கா.வை ஆட்சியாளர்கள் நம்பப் போவதில்லை! (அதற்குப் பிறகும் நம்புவார்களா என்பது வேறுகதை!)

இவ்வாறானதொரு நிலையில்தான், அரசை விமர்சிக்கும் வகையில் மு.கா. செயலாளர் போன்றோர் வெளியிடும் அறிக்கைகள் ஆட்சியாளர்களை கோபப்படுத்தியுள்ளன. அதன் விளைவுதான், மு.கா.வினர் புறமொதுக்கப்படுவதும், அவமானப்பட நேர்வதுமாகும்.

இவை இவ்வாறிருக்க, அபிவிருத்தி நடவடிக்கைகளின் போது – மு.காங்கிரஸ் புறக்கணிக்கப்படுவதாக ஜனாதிபதியிடம் மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்கள் முறையிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று தியத்தலாவை ராணுவக் கல்லூரியில் செயலமர்வொன்று இடம்பெற்றது. அதன்போது வருகை தந்திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம்தான் மு.கா. நாடளுமன்ற உறுப்பினர்கள் தமது முறைப்பாட்டினைத் தெரிவித்துள்ளார்கள்.  

இதனையடுத்து, மு.கா.வுடன் பேசுவதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார். ஆயினும், அந்தப் பேச்சுவார்த்தையின் போதும் என்ன நடக்கும் என்பதை இப்போதே நாம் ஊகித்துச் சொல்ல முடியும். மு.கா.வினர் அரசாங்கத்தோடு இருப்பதால் - அடக்கி வாசிக்கவும், அரசுக்கு விசுவாசத்தினை வெளிப்படுத்தவும் கோரப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை!

ஒரே வார்த்தையில் சொன்னால், இந்த அரசாங்கத்தில் மு.காங்கிரஸ் இரண்டுங் கெட்டான் நிலையில்தான் இன்னுமிருக்கிறது. மு.கா. தலைவர்களில் சிலர் தண்ணிக்கும் - வேறு சிலர் தவிட்டுக்கும் இழுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதனால், மு.கா. எனும் வண்டியானது, எந்தத் திசையிலும் உறுதியாகப் பயணிக்க முடியாமல் குழம்பிப் போய்க் கிடக்கிறது!

மு.கா. தலைவர்களிடையே காணப்படும் இந்த இரண்டுங் கெட்டான் நிலை குறித்து, சில வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற அந்தக் கட்சியின் உயர்பீடக் கூட்டத்திலும் கேள்வியெழுப்பப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அதாவது, அரசியல் மற்றும் கட்சி சார்ந்த அநேக விடயங்களில் மு.காங்கிரஸின் தலைவர்கள் ஒத்த கருத்தினை வெளிப்படுத்துவதில்லை. உதாரணமாக, ஏதாவதொரு விடயம் குறித்து கட்சியின் தலைவர் ஒரு கருத்தைக் கூறும்போது, செயலாளர் இன்னொரு கருத்தினையும், தவிசாளர் வேறொரு கருத்தினையும் தெரிவிக்கின்றனர். இது ஆரோக்கியமானதொரு விடயமல்ல என்று கட்சியின் உயர்பீட அங்கத்தவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

இந்தக் குற்றச்சாட்டுக்கான விளக்கத்தினை கட்சியின் தலைவர் ஹக்கீம் வழங்கினார். வழமைபோல் வார்த்தை ஜாலங்களால் - அவர் தனது விளக்கத்தினை நிறைவு செய்திருந்தார்.

ஆக, மு.கா.வினர் ஒத்த கருத்துடன் செயற்படவில்லை என்பது பொய்யில்லை. அந்தக் கட்சியின் உயர்பீட உறுப்பினர்களிடமே இந்தக் குற்றச் சாட்டு உள்ளது. எனவே, முதலில் மு.கா.வின் தலைவர்கள் இந்த விடயத்தில் ஒத்துப்போக வேண்டும்!

அரசாங்கத்தில் இருப்பதென்றால் அடக்கி வாசிக்க வேண்டும். விமர்சிக்காமல் விடமாட்டோம் என்றால் - எதிரணிக்குச் செல்ல வேண்டும்!

இரண்டுங்கெட்டான் நிலையென்பது – கடைசியில் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும்!!


  Comments - 0

  • Faazil Thursday, 08 March 2012 10:32 PM

    உலக முடிவின்போது கட்டுரையாளர்கள் அதிகரித்து இந்த பூமியில் முஸ்லிம்களுக்கு மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவார்கள். அதில் ஒன்றுதான் இந்த மாதிரியான கட்டுரை.

    Reply : 0       0

    Minwar Wednesday, 07 March 2012 08:52 PM

    SAMOOHAN அவர்களே... யாரோட கொடுப்புக்குள் இருக்கும் சோறு முஸ்லிம் காங்கிரசினுடையது? கொஞ்சம் வௌக்காம சொல்லுங்கோ!

    Reply : 0       0

    jambi Wednesday, 07 March 2012 09:59 PM

    இருக்கு.... ஆனால்.... இல்லை....
    வரும் ஆனால் வராது....
    தலைப்பு ஓக்கே யா?

    Reply : 0       0

    Thasneem Wednesday, 07 March 2012 10:13 PM

    ஆட்சியாளர்களை அனுப்புவதும் நாங்களே ! அழிப்பதும் நாங்களே! (அல் குரான்)
    So யாரும் யாரையும் கலங்கப் படுத்தவோ காயப்படுத்தவோ வேண்டாம்! உங்கள் தேவைகளை படைத்த இறைவன் அல்லாஹ்விடம் கேளுங்கள்! நிச்சயம் வழி காட்டுவான்! இது சத்தியம் !

    Reply : 0       0

    fa Wednesday, 07 March 2012 10:57 PM

    without any conditions and grounds SLMC gave their hand with UPFA because while SLMC was searching a path to keep their members to go out from the party ,and also they tooked all efforts to success of Fonseka,so whatever happen the leader of SLMC doesn't like to take a action against this sort of evens............... until his faults is to be come / to be realized as wright

    Reply : 0       0

    musleem Wednesday, 07 March 2012 11:30 PM

    கண்டில 3 முறை வெற்றி பெற்ற ஹகீம் என்ன பண்ணி இருக்காரு ?
    தேர்தல் நேரத்துல மட்டும் வந்து போறவரு அடுத்த முறை தேர்தலுக்கு வரட்டும் பார்க்கலாம் , யாராச்சி போராளி பெருச்சாளினு வந்தா இருக்குது ஆப்பு. இஸ்லாம் புனிதமானது அதை பணத்துக்காக விக்கதிங்க.

    Reply : 0       0

    irumban Thursday, 08 March 2012 12:15 AM

    அபிவிருத்தி என்ற ஒன்றை மக்களுக்கு காட்டி இன்று முஸ்லிம் அரசியல் வாதிகளின் வாய்களை மூடி முஸ்லிம் மக்களை கரையான் போன்று மெதுமெதுவாக அளிக்கும் அரசின் அவ தந்திரத்தை அறிந்த மு.க. தலைமை இரெண்டும் கெட்ட நிலையில் இருப்பது முட்டாள் தனம் அல்ல பொறுமை....
    சில உண்மைகளை உரிய இடத்தில் இருக்கும் போதுதான் அதனை விளங்கிக்கொள்ள முடியும்...
    (உதாரணம் அக்கரைப்பற்று , காத்தான் குடி போன்றவற்றின் உள் வீதிகளை சென்று பார்வை இடவும் அங்குள்ள அமைச்சுகளின் அபிவிருத்திகள் புரியும்....)

    Reply : 0       0

    SAMOOHAN Thursday, 08 March 2012 02:26 AM

    minver உதுமான், அதாவுல்லாஹ், ரிசாத் , ஹிஸ்புல்லாஹ், அமீரலி எல்லாருடைய கொடுப்புக்குள் இருக்கும் சோறு. முஸ்லிம் கோங்க்ராஸ் வாழவேண்டும். தலைமை மாறலாம். முஸ்லிம்களின் குரல் முஸ்லிம் கோங்க்ராஸ்.

    Reply : 0       0

    pottuvilan Thursday, 08 March 2012 02:35 AM

    சலுகைகளுக்காவும் உதவிகளுக்காகவும் எதையும் இழக்க (எழுத)தயாராக நமது சமூகத்தில் பலர் இருக்கும் வரை இநமது நிலை இதே கதிதான்.

    Reply : 0       0

    m.i.samsudeen Thursday, 08 March 2012 03:14 AM

    விழுந்தாலும் மீசையில் மண் படேல்ல என்ற கதைதான். இரும்பனே புலிகள் ஒடுங்கி முள்ளி வாய்க்காலுக்குள் வந்தது போல முஸ்லிம் காங்கிரஸ் ஒடுக்கி கல்முனை மாநகர சபைக்குள் வந்து விட்டது. மாகான சபை தேர்தல் உடன் ஸ்ரீ.மு.கா பெயரும் அழிந்து விடும் சற்று பொறுங்கள் .ஜவாத்+ஜெமீல்=ஹக்கீம் ,
    சிராஸ்+ஹரீஸ்=ஹக்கீம் , ஜெமீல்-சிராஸ்=ஹக்கீம்,
    ஹரீஸ்-ஜவாத்=ஹக்கீம் # மொத்தம்=0000

    Reply : 0       0

    Minwar Thursday, 08 March 2012 02:32 PM

    மிஸ்டர் பொத்துவிலான், சலுகைகளுக்காகவும், உதவிகளுக்காகவும் எதையும் இழக்க நமது சமூகத்தில் பலர் இருக்கும் வரை நமது நிலை இதுதான் என்று சொல்லியிருக்கிறீங்க...

    ஆனால், இந்த அரசாங்கத்துடன் மு.கா. சேர்ந்ததுக்குச் அந்தக் கட்சி சொன்ன காரணம், நமக்கு சலுகைகள் வேணும், அபிவிருத்திகள் வேணும் அதுக்காகத்தான் சேருகிறோம் என்றுதானே....

    அப்படியென்டா, எதுக்காகச் சேர்ந்தாங்களோ... அதைப் பெறவேணுமில்லையா? அப்படியில்லாட்டா, சந்தோசமாக கிளம்பி எதிர்க்கட்சிக்கு வரலாமில்லையா? நானும் மு.கா. தொண்டன்தான். ஆனா, உண்மைய சொல்லணும்!

    Reply : 0       0

    Asees Thursday, 08 March 2012 02:38 PM

    மு.காங்கிரஸ் என்கிற கட்சி தேவையில்லை என்டு இந்தக் கட்டுரையில் சொல்லப்படவில்லையே. ஏதாவது ஒரு விசயத்தை ஒழுங்கா செய்யுங்கோ எண்டுதானே எழுதப்பட்டிருக்கு.

    ஒன்டில் அரசாங்கத்துடன் இருந்து, பெறுவதைப் பெற்று மக்களுக்குக் கொடுங்கோ..... அல்லது, எதிரணிக்கு வந்து சமூகத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுங்கோ எண்டுதானே கட்டுரையாளர் எழுதியிருக்கிறார்.

    கட்சி போதை கண்ணை மறைக்கிறதால, சிலருக்கு ஆண் மாடும் புரியுதில்ல... பொம்புள மாடும் புரியுதில்ல!

    Reply : 0       0

    SAMOOHAN Wednesday, 07 March 2012 06:48 PM

    கொடுப்புக்குள் இருக்கும் சோறு கூட முஸ்லிம் காங்கிரஸ் உடையது. ரோசமா இல்லை?

    Reply : 0       0

    irumban Thursday, 08 March 2012 10:42 PM

    எதிர்க்கட்சியில் இருந்து மக்களுக்காக குரல் கொடுக்கும்போது, உரிமை பற்றி பேசும்போது அபிவிருத்தி வேண்டும் என்று கூச்சலிட்டார்கள் ...
    சரி அபிவிருத்தி செய்வோம் என்று அரசுடன் மு.கா. இணைந்தது சில அபிவிருத்திகள் முன்மொழியப்பட்டும் அது நிராகரிக்கப்பட்டது. (அதற்காக எதிர்கட்சியில் அமர்வது சரியாய் அசீஸ் ???)
    இப்போது அதற்கும் கூச்சலிடுகிறார்கள். முட்டாள் தனமாக தெரியவில்லையா????
    இரண்டும் கெட்டான் நிலை என்பது மு.கா. அல்ல மக்களாகிய நீங்கள்தான்...

    Reply : 0       0

    irumban Thursday, 08 March 2012 10:59 PM

    சம்சுதீன் மு.கா. என்ற ஒன்று அழிந்தால் நீங்களும் போர்க்கொடி தூக்கி எமது உரிமைகளுக்காக அரசுடன் போராட வேண்டி இருக்கும்... சிறு இலாபங்கள் பெற முடியாமைக்காக மு.கா வை குறை கூறுவது நயவஞ்சகமாக தெரிகிறது (மு.கா. அதன் சுயநலத்துக்காக ஆட்சி நடத்த வில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்) ...
    நீங்கள் சொன்ன மகான் கணக்கின் படி சமன் பாட்டின் மறு பக்கம் ஹக்கீம் நிலைத்து இருக்கிறார்... அது பூச்சியம் அல்ல.. so முஸ்லிம் காங்கிரஸ் நிலைத்து இருக்கும்...

    Reply : 0       0

    irumban Thursday, 08 March 2012 11:11 PM

    Minwar போராட்டம் என்பது சண்டைதான் என்ற . போராளிகள் என்போர் களத்தில் சண்டை இடுபவர்கள் என்ற மடத்தனமான என்னத்தை நீங்கள் நீக்க வேண்டும்.. உங்களை போன்ற அறிவிலிகளுக்கு சில உண்மைகளை புரிய வைப்பதும் ஒரு வகை போராட்டம்தான்.... இதைத்தான் இன்று முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் செய்து கொண்டு இருக்கிறார்கள்... மு.க யின் உண்மைத்தன்மை புரிந்தவர்கள் இன்றும் ஒரு மனதுடன் இருக்கிறார்கள் ... சில இலாபம் பெற முடியாதவர்கள் பல மனப்பட்டு கதைக்குறார்கள்.

    Reply : 0       0

    irumban Thursday, 08 March 2012 11:18 PM

    இப்போது அபிவிருத்தி சம்பந்தமாக ஹசனலி வெளி இட்டு அது நிராகரிக்கப்பட்டது யாரின் தவறு??????

    Reply : 0       0

    irumban Thursday, 08 March 2012 11:28 PM

    எழுத்தாளர் ஒன்றை உணர வேண்டும். நாம் பெரும்பான்மையினர் அல்ல, சிறு பான்மையினர். எமக்கு எந்த பக்கம் சாதகமோ அந்த பக்கம் இருந்து கொண்டுதான் எமது திட்டங்களை முன்னடுக்க முடியும்.. நேற்று சரத் இன்று மகிந்த, நாளை யாருக்கு வேண்டும் என்றாலும் அதரவு அளிக்கப்படலாம்..... அதுதான் அரசியலும்.... இதற்காக நாம் ஒரு கட்சியை குறை கூறுவது மிகை ஆகாது.....
    என்னய்யா பெரும்பான்மை எதிர்கட்சிகளின் நிலைகளை நீங்கள் பார்க்கவில்லையா????

    Reply : 0       0

    Asees Friday, 09 March 2012 03:59 AM

    இரும்பன், நீங்க சொல்லுறதைத்தான் நாங்களும் சொல்லுறம்.... எழுத்தாளரும் சொல்லுறார்....

    மஹிந்தவோட சார்ந்து நிண்டு, காரியத்தை வெல்ல வேண்டும் எண்டால், அதை செய்யுற மாதிரிச் செய்யணும். இப்படி பேயன் பிலாப்பழம் பார்த்த கதையாக இருக்கக் கூடாது.

    Reply : 0       0

    Nanpan... Saturday, 10 March 2012 03:12 AM

    அசீஸ், நீங்கள் கூறுவது போன்று நின்றால் கடைசியில் நீங்கள் இருப்பதற்கு கூட இடமில்லாமல் போய் விடும், சொந்த சமூகத்தை காட்டிக்கொடுத்து அரசியல் நடத்துவது ஒரு முஸ்லிம் தலைவனுக்கு அழகல்ல.. அவர்கள் கூறுவதற்கெல்லாம் தலை ஆட்டுவதர்க்கா மக்கள் வாக்களித்தார்கள்? ஆளும் கட்சியில் இருந்தாலும் தனது சமூகத்திற்கு ஒரு பிரச்சினை என்றால் அதனை துணிந்து கேட்க வேண்டும்.. இதையே SLMC செய்கிறது..
    இவர்கள் மற்றவர்களைப்போல் கோழைகள் அல்ல..

    Reply : 0       0

    Abdur Rahman Abdullah Monday, 12 March 2012 10:21 AM

    இளம் தலைவர்கள் பிறக்க வேண்டும். இஸ்லாம் பாதுகாக்க வேண்டும். கலீமா எங்கும் ஒழிக்க வேண்டும். மாற்றம் வேண்டும் மடமை தலைவர்கள் வேண்டாம். மனிதன் என்று சொல்ல நீ தலை நிமுர்ந்து பேசடா தன்மானம் காப்போம் கைகோர்த்து வாழ்வோம். இளம் தலைவர்களே நாளைய தலைமை உனக்கே னாரே தக்பீர் அல்லாஹு அக்கபர் னாரே தக்பீர் அல்லாஹு அக்பர்.
    அப்துல் ரஹ்மான் அப்துல்லாஹ்
    மதீனாவில் இருந்து

    Reply : 0       0

    சேணையுரான் Monday, 12 March 2012 04:18 PM

    சமுகன்
    நீங்கள் சொல்லுவது போல் உது அதா றிசாட் அமீர் ஹிஸ்பு அவர்களின் கொடுப்பில் இருப்பது மு.காங்ரஸ் சோறு என்றாலும் கட்சிக்கும் அவர்களுக்கும் பாலுட்டி சோறுட்டி வளர்த்தது மு.கா. ஸ்தாபக தலைவர் மர்ஹும் அஸ்ரப். ஹக்கிம் அல்ல.

    ஆனால் தற்போதைய தலைவரிடம் இருக்கும் தலைமை பதவி இவர்கள் அவருக்கு போட்ட பிச்சை.

    Reply : 0       0

    rafi Sunday, 18 March 2012 06:01 AM

    இந்த ஆட்சியில் முஸ்லிம் காங்கிரஸுக்கு என்ன வேலையப்பா?

    Reply : 0       0

    siriththiran Wednesday, 07 March 2012 01:25 PM

    சிறுபான்மை மக்களுக்கு பொன்சேகா கிடைத்தது நிர்வாணமாக நிர்க்கதியாக இருப்பவர்களுக்கு ஒரு கச்சை கிடைத்தது போல் என்று பகிரங்கமாக பேசி, பின்னர் அவரை தவிக்க விட்டு அரசுடன் கூட்டுவைத்து சுயநல அரசியல் செய்தால் அந்த பாவம் சும்மா விடுமா ...

    Reply : 0       0

    ooraan Wednesday, 07 March 2012 03:10 AM

    நாங்கள் சோரம்போகும் அரசியல் செய்யவில்லை .... யாரு தவறு செய்தாலும் தட்டிக் கேக்க வேண்டும் .....அது அரசு or அரசாங்கம் என்று யாரு என்றாலும் பரவாயில்லை .........ஒரு சில கைத்தடிகள் போன்று முஸ்லிம் காங்கரஸ் இல்லை என்பது உண்மை....... அதனால்தான் அவர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை.

    Reply : 0       0

    meenavan Wednesday, 07 March 2012 03:16 AM

    @மப்றூக் காத்திரமான ஆய்வு, இரண்டும் கெட்டான் நிலை என்பதை விட ஆப்பிழுத்த குரங்கின் நிலைமை என்றால் பொருந்தாதா?

    Reply : 0       0

    meenavan Wednesday, 07 March 2012 03:43 AM

    கட்சி செயலாளர் அவமதிக்கப்படும் போது அக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் செயலாளரையும் சேர்த்துக்கொண்டு வெளி நடப்பு செய்திருக்கவேண்டும். மர்ஹூம் தலைவா நீங்கள் உருவாக்கிய கட்சிக்கு இப்படியொரு இழி நிலையா?

    Reply : 0       0

    m.i.samsudeen Wednesday, 07 March 2012 04:11 AM

    மப்ரூக் உங்கள் கருது வரவேற்கதக்கது. இருந்தாலும் முஸ்லிம் காங்கிரசின் மாயாஜால வித்தைகள் யாவும் சிறு பிள்ளைகளும் அறிந்த விடயம். அது அவ்வாறிருக்க இதனை நாம் அலட்டிக் கொள்ள தேவை இல்லை. இது அவர்களுக்கு கை வந்த கலை. ஹசன் அலிக்கு பசில் வெய்த வேட்டு சரி என்று சொல்வதற்கும் உச்ச பீடத்துக்குள் கனவான்கள் இருக்கின்றனர். இதுவெல்லாம் அவர்களுக்கு ஜு ஜு பீ.

    Reply : 0       0

    irumban Wednesday, 07 March 2012 05:18 AM

    முஸ்லிம் காங்கிரசை குறை கூறுபவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் அல்ல மு.க யில் இலாபம் பெற முனைந்து அது பெறப்படாமல் விரட்டி அடிக்கப்பட்டவர்கள்தாம் குறை கூறி திரிபவர்கள்.... இவர்கள் எல்லாம் சுய நலவாதிகள்....

    Reply : 0       0

    irumban Wednesday, 07 March 2012 05:28 AM

    சொகுசு வாகனங்களுக்கு அடிபணியாமல்,சுய புத்தியுடன் செயற்படாமல் இருப்பதை விட மக்களின் பிரச்சினைகளை கூறி மக்களுக்காக மடப்பட்டம் வாங்குவது எவ்வளவோ மேல்.......

    Reply : 0       0

    irumban Wednesday, 07 March 2012 05:41 AM

    உகது மலையளவு தங்கத்தை காட்டி போதுமா என்று உங்களிடம் கேட்டால் அதுவும் போதாது என்று சொல்லும் சமுகத்தில் உள்ளவர்கள் முன் அரசியல் என்ன குடும்பமே நடத்த முடியாது.....
    இப்போது மு.க. நடவடிக்கைகள் மாயாஜால வித்தை காட்டுகிறது என்றால் அது முட்டாள் தனம் அல்ல அது புத்திசாலித்தனம்(மகிந்தேயின் ஆட்சியில் )...
    (அடக்கமுடையார் அறிவிலர் என்று எண்ணி கடக்க கருதவும் வேண்டாம்........)

    Reply : 0       0

    irumban Wednesday, 07 March 2012 05:46 AM

    அரசாங்கம் முஸ்லிம் காங்கிரசை இழிவு படுத்துமானால் அது வெளிக்காட்டுவது முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தின் மாய வலையில் சிக்க வில்லை என்பதும்,முஸ்லிம் அமைச்சுகள் போன்று அரசிடம் ஜால்ரா அடிக்க வில்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்..

    Reply : 0       0

    easternbrother Wednesday, 07 March 2012 05:47 AM

    தலைவர் அஷ்ரப் என்று மரணித்தாரோ அன்றே அந்த முஸ்லிம் காங்கிரஸ் செத்து விட்டது...... இனி ஒரு புது தலைவரை முஸ்லிம்கள் தேட வேண்டும்........ நடக்குமா

    Reply : 0       0

    uthuman Wednesday, 07 March 2012 06:15 AM

    கட்டுரையாளர் கடைசியாய் என்ன சொல்ல வருகிறார்?
    முஸ்லிம் காங்கிரஸ் அதன் புனிதத்துடன் இருக்கிறது. இதனை அதன் படிமுறை தெரியாமல் எழுத தெரிந்தால் எப்படியும் எழுதலாம் என்ற அகங்காரத்தில் எழுதப்பட்ட கட்டுரையாகத்தான் இது தெரியுது. ஆனால் கட்சியை அவமதித்து எழுத எவருக்கும் உரிமை இல்லை அறிந்து கொள்ளவும்.

    Reply : 0       0

    MADURANKULI KURANKAAR Wednesday, 07 March 2012 07:01 AM

    என்னே இரும்பன் முஸ்லிம் காங்கிரஸ் போராளியா? போராளி யன்று சொல்லே வெட்கம் இல்லையா உங்களுக்கு

    Reply : 0       0

    sakeena nelugollakada. Wednesday, 07 March 2012 02:16 AM

    முக முழு மனதுடன் இணையவில்லையென்பது தான் உண்மை, இவ்வரசாங்கத்தில் அமைச்சு பதவிகள் அவர்களின் சுகபோகங்களுக்கு உதவுமே தவிர, மக்களுக்கு எதுவும் பண்ண விடாது. மக்களின் அபிவிருத்தி ஆசைக்கும், மற்றைய சகாக்களை காக்கவுமே தலைவர் அரசுடன் இணைந்தார் என்பது நாடறிந்த உண்மை.

    Reply : 0       0

    awathani Wednesday, 07 March 2012 03:22 PM

    உண்மையில் தலைமைத்துவம் உறுதியுடன் இருந்தால் இந்த விடயம் எல்லாம் ஒரு தூசி, தலைமைத்துவத்தின் நலிவுத் தன்மையே இத்தனைக்கும் காரணம். அரசை பிழை சொல்லி எந்தப்பயனும் இல்லை. கட்சியின் கட்டுக்கோப்பை உறுதிப்படுத்த வேண்டும். இதட்கு கட்சியின் முக்கிய உறுப்பினர் சிலர் தூக்கி வீசப்பட வேண்டும், தலைமைத்துவம் இதை செய்யுமா?

    Reply : 0       0

    abdullah` Wednesday, 07 March 2012 03:30 PM

    irumbanசென்னது போல் இலாபத்துக்காக தலையை இஉள்விட்டு இறுகி எடுக்கமுடியாமல் களட்டிவிரட்டிஅடிக்கப்பட்ட எட்டப்பர்களின் கதைதான் இது பாவம்பா. எப்பவும் எங்கயும் முஸ்லிம் காங்கரஸ் ஒருமித்து நிற்கும் இந்தக்கட்சி ஆண்டவனிடம் இருகரம் ஏந்திப்பெற்றது மற்றமடயர்கள் மாதிரி சாராய தவறனைக்குள் பெற்றது அல்ல தலைவனுக்கே வாப்பா யார்தான் என்று தெரியாதவன் இவனுடன் சோர்ந்தவன்கள் எப்படி?

    Reply : 0       0

    Ossan Salam - Doha Wednesday, 07 March 2012 03:46 PM

    கட்டுரையாளரின் கூற்றுப்படி பார்த்தால் முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சி முஸ்லிம்களுக்கு தேவை தானா என்று ஒரு கேள்வி எழுந்தால் "தேவை தான் ஆனால் தேவை போல் இருக்கிறது எனினும் தேவை இல்லை" என்ற பதில் தான் பொருத்தமாக இருக்கும்... ஏனென்றால் காங்கிரஸ் தனித்துவம் போராட்டம் என்றெல்லாம் பீற்றிவிட்டு வேறு வழியில்லாமல் அரச வாகனத்தில் தொங்கிக் கொண்டு செல்கிறது. இது அரசுக்கும் காங்கிரஸ் தலைமைக்கும் தெரியும். ஆகவே போராட்டம் தனித்துவம் என்ற கோஷங்கள் தேர்தல் காலத்துக்கு மட்டுமே பயன்படும்...

    Reply : 0       0

    riyas Wednesday, 07 March 2012 04:44 PM

    மு. க வும் அதன் தலைமையும் பிழையான வழியில் செல்லுமாக இருந்தால் அதனை அழித்துவிடு யா அல்லாஹ் என்று கேட்ட துஆ நிறைவேறுகிறது. மு க பிழையான வழியில் பயணிக்கிறது என்பது மட்டுமே உண்மை.

    கட்சி இருந்துகொண்டு மக்களுக்கு எந்த பயனும் இல்லாமல் இருப்பதை விட (அதைவிட ஆட்சியாளர்களிடம் பிழையான வழிக்கு இட்டு செல்வதை விடவும்) இல்லாமல் இருப்பது மேல். இந்த கட்சியினால் யாருக்கு நன்மை என்றால் அதன் தலைமைக்கும் தலைமைக்கு ஜால்ரா அடிப்பவர்களுக்கும் தான்.

    இன்று பிராந்திய தலைவர்களே இன்றைய காலத்தின் தேவை ஹிஸ்புல்லா அதாவுல்லாஹ் போன்று கல்முனைக்கும் ஒருவர் வந்தால் சரியே?


    கல்முனை மாநகர் இதற்கு நல்ல உதாரணமாகும் தலைவனும் உதாரணம் அண்மைய கிழக்கு மாகாண Governer விஜயம்.

    Reply : 0       0

    ***மல்லிகை சிராஜ்***siro Wednesday, 07 March 2012 04:50 PM

    என்னமோ பண்ணுங்க .

    Reply : 0       0

    naufelmhm Wednesday, 07 March 2012 05:01 PM

    இன்று முஸ்லிம் காங்கிரஸில் போராளிகள் என்று யாருமில்லை, எல்லோரும் கோமாளிகள்.

    Reply : 0       0

    nifras Wednesday, 07 March 2012 05:26 PM

    கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைதான் இப்போதைய முஸ்லிம் காங்கிரஸ்.

    Reply : 0       0

    MULLAH Wednesday, 07 March 2012 05:56 PM

    மப்றூக் அவர்களின் விழிப்புணர்வுக்கு நன்றிகள்.
    மு.கா இன் கொள்கைகளும்இ கோட்பாடுகளும் தலைவர் மர்ஹும் அஸ்ரபோடு புதைந்ததுவிட்டது. முஸ்லிம்களின் அபிலாஷைகளை காப்பதற்கு வளர்த்தெடுக்கப்பட்ட கட்சி இப்போது கட்சியை கூட காப்பதற்கு திணறுகிறது. நான் குறை சொல்லவில்லை முஸ்லிம்களின் தேசியக்கட்சியின் நிலையினை கூறுகிறேன்.

    Reply : 0       0

    Minwar Wednesday, 07 March 2012 06:38 PM

    உதுமான் அவர்களே.... (ஆமா, இது சொந்தப் பெயர்தானா?)
    //கட்சியை அவமதித்து எழுத எவருக்கும் உரிமை இல்லை அறிந்து கொள்ளவும்//

    கட்சிக்காக வோட்டுப் போடுங்க என்று - அதன் தலைவர்கள் பிச்சைக்காரர்களின் கால்களில் கூட விழுவார்களாம், அப்போது மக்கள் எப்படித் திட்டினாலும் தாங்கிக் கொள்வார்களாம்...

    ஆனால், அவர்கள் எம்.பி.யான பிறகு - கட்சியை அவமதித்து எழுத எவருக்கும் உரிமையில்லை என்பார்களாம்!

    இந்தக் கட்டுரையில் என்ன பிழையிருக்கு? நடப்பதைத்தானே எழுதியியருக்கிறார். ஏதாவது அபாண்டமாக எழுதப்பட்டிருந்தால் சொல்லுங்க!

    Reply : 0       0

    Minwar Wednesday, 07 March 2012 06:40 PM

    இரும்பனுக்கு - நல்லா முத்திப் போயிட்டுது போல கிடக்கு....

    போராளிகள் என்றால் யார் - எந்த யுத்த களத்துல நின்று சண்டையிட்டார்கள்!

    உங்களுக்கு நல்லாத் தெளிய வேண்டும் என்று பிரார்த்திக்கிறன்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .