Super User / 2012 ஏப்ரல் 01 , பி.ப. 06:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜெனீவாவில் ஐ.நா.மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டு வந்த பிரேரணை மூலம் இலங்கை அரசாங்கம் மனித உரிமை விடயத்தில் தமக்கு எதிரான சர்வதேச விசாரணையை தவிர்த்துக் கொண்டது என நாம் கடந்த வாரம் கூறினோம். அமெரிக்க பிரேரணை மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உள் நாட்டில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்விணக்க ஆணைக் குழுவின் சிபார்சுகளை அமுலாக்க வேண்டும் என்று வலியுறுத்துவதே அதற்கு காரணமாகும்.
நல்லிணக்க ஆணைக் குழுவின் சகல சிபாரிகளையும் நிரைவேற்ற முடியாது என ஜெனீவா சென்ற மற்றொரு அமைச்சரான மஹிந்த சமரசிங்க கூறியிருந்தார். ஆணைக் குழுவின் சகல சிபார்களையும் நிரைவேற்ற வெண்டும் என ஜெனீவா பிரேரணையும் இலங்கையை வலியுறுத்தவில்லை. ஆணைக் குழுவின் சிபார்சுகளில் ஆக்கபூர்வமான சிபார்சுகளை நிறைவேற்ற வேண்டும் என்றே பிரேரணை கூறுகிறது.
நல்லிணக்க ஆணைக்குழு தமது வரையறைகளுக்கு அப்பால் சென்றுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியிருக்கிறார். இதற்கு முன்னர் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் இதனை கூறியிருந்தார். ஆனால் அமைச்சர் டியூ குணசேகர அணைக்குழு அவ்வாறு தமது வரையறைகளுக்கு அப்பால் செல்லவில்லையெனக் கூறுகிறார். 2 hours ago
6 hours ago
7 hours ago
jeyarajah Monday, 02 April 2012 11:29 AM
ஐயூப், நன்றி.
ஆணைக்குழுவின் எல்லா சிபார்சுகளையும் நடை முறைப்படுத்த முடியாது என்று சம்பிக்கவும் சொல்கின்றார். அதை ஆணைக்குழுவிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். என் நடைமுறைப்படுத்த முடியாது என்பதும் எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதையும் அவர்கள் விளக்கம் தருவார்கள். You have appointed the commitee ,so you can ask from the commitee how to implement it. if not then why you have appointed the committee. This is not a no binding resolution. wait and see at next meeting
ஆணைக்குழுவுக்கு என்ன வரையறை.
Reply : 0 0
குமார் Monday, 02 April 2012 08:31 PM
இதய சுத்தியுடன் நல்ல நோக்கத்தோடு ஆணைக்குழுக்களை அமைத்திருந்தால் அவற்றின் சிபாரிசுகளை ஏற்றுக்கொண்டிருக்கலாம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago