Super User / 2012 மே 13 , பி.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ்நாட்டுத் தலைவர்கள் இலங்கையில் தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்று அடிக்கடி கோருவதை அண்மையில் இந்திய நாடாளுமன்ற தூதுக் குழுவொன்றுக்கு தலைமை தாங்கி இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா ஸ்வராஜ் விமர்சித்துள்ளர். தமது அண்மைய இலங்கை விஜயத்தின் போது தாம் சந்தித்த இலங்கைத் தமிழ்த் தலைவர்கள் பிரிவினையை கோரவில்லையென்றும் ஐக்கிய இலங்கைக்குள் இனப்பிரச்சினைக்கு தீர்வு பேற வேண்டும் என்பதே அவர்களது அவாவாக இருக்கிறது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
சம்பந்தனின் இந்த நிலைப்பாட்டை வைத்து அவரை பாராட்டியதன் மூலம் இலங்கையில் பிரவினையை ஏற்கவில்லை என்ற தமது நிலைப்பாட்டை இந்தியா மீண்டும் எடுத்துக் காட்டியுள்ளது. இதற்கு முன்னரும் பல முறை இந்தியா இந்த நிலைப்பாட்டை நேரடியாகவும் சூசகமாகவும் கூறியிருந்த போதிலும் இலங்கை தமிழ் தலைவர்கள், குறிப்பாக தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர்கள் அதன் பாரதூரத்தை விளங்கிக் கொள்ளவில்லை. அதாவது அவர்கள் பூகோள அரசியலை விளங்கிக் கொள்ளவில்லை. அதன் பின் விளைவுகளையும் அனுபவித்தார்கள்.
சம்பந்தன், சிங்கக் கொடியை ஏந்தியதை அவரது கூட்டமைப்பை சேர்ந்த சிலர் ஏற்றுக் கொள்ளவில்லை என்று ஆரம்பத்தில் செய்தி வெளியாகியது. சம்பந்தன் தேசிய கொடியை உயர்த்தியதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்டதாக செய்தி வெளியாகியிருந்தது.
இது போன்ற கருத்து முரண்பாடுகள் தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல சகல சமூகங்களுக்குள்ளும் இருக்கின்றன. முஸ்லிம்கள் இன்று பத்துக்கு மேற்பட்ட அரசியல் கட்சிகளுக்கு பிரிந்துவிட்டார்கள். இவை எதுவுமே அரசியல் சித்தாந்த ரீதியிலான பிளவுகளல்ல. சிலர் கபினட் அமைச்சர் பதவிகளுக்காகவும், சிலர் தேசிய பட்டியல் எம்.பி. பதவிகளுக்காகவும், சிலர் வெறுமனே தாமும் தலைவரொருவர் ஆக வேண்டும் என்பதற்காகவும் கட்சிகளை அமைத்து சமூகத்தை பிரித்து விட்டார்கள். 2 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago