A.P.Mathan / 2012 மே 25 , மு.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

தேர்தல் என்பதே பொதுமக்களின் பெரும்பான்மை விருப்பினை அடையாளம் காண்பதற்கானதொரு முறைமையாகும். அப்படியாயின், கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அதிகூடிய பிரதிநிதிகளைப் பெறும் கட்சி முதலமைச்சர் பதவியினைப் பெற்றுக் கொள்ளும். பின்னர், அந்தக் கட்சியில் அதிமான விருப்பு வாக்குகளைப் பெறுகின்ற நபர் - குறித்த பதவிக்கு நியமிக்கப்படுதல் வேண்டும். இதுவே ஜனநாயகமாக அமையும்.
இவைகளுக்கப்பால், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் த.தே.கூட்டமைப்பு போன்ற பிரதான அரசியல் கட்சிகள் - முதலமைச்சர் பதவியானது தமது கட்சி சார்பான ஒருவருக்கே கிடைக்க வேண்டும் என்று வாதிடுகின்றன. இது - கட்சி சார்ந்த கோசங்களாகும்.
இதனைக் காரணமாகக் காட்டித்தான் – முஸ்லிம் தரப்புக்கே முதலமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டுமென ஒரு கட்டத்தில் ஹிஸ்புல்லா போன்றவர்கள் ஒற்றைக் காலில் நின்றனர்.
இன்னொரு புறம், முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரைப் பெறுவதற்கான சந்தர்ப்பமொன்றும் அங்கு காணப்பட்டது. அதாவது, ஐ.ம.சு. முன்னணி சார்பில் தெரிவான 08 உறுப்பினர்களும் ஐ.தே.கட்சியுடன் இணைந்து ஓர் ஆட்சியினை உருவாக்கி - முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரைப் பெற்றெடுத்திருக்கலாம். முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக நியமிக்கப்படாது போனால் - தாம் எதிர்கட்சியுடன் இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பில் சிந்தித்து வருவதாக, அப்போது லண்டன் பி.பி.சி.க்கு வழங்கிய செவ்வியொன்றில் ஹிஸ்புல்லாவும் கூறியிருந்தார். ஐ.தே.கட்சியும் இதற்குத் தயாராகவே இருந்தது. ஆனால், அரசோடு இணைந்திருந்த அமைச்சர்களான அதாவுல்லா மற்றும் றிசாத் பதியுதீன் போன்றோர் தமது அரசியல் நலன் கருதி அப்போது, அவ்வாறானதொரு தீர்மானத்தை எடுக்கத் துணியவில்லை!
இந்த நிலையில், மு.காங்கிரஸின் தவிசாளரும் பிரதியமைச்சருமான பஷீர் சேகுதாவூத், கடந்த வாரம் ஆங்கிலப் பத்திரிகையொன்றுக்கு வழங்கியிருந்த நேர்காணலொன்றில் - கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலொன்று இடம்பெறுமாயின் மு.காங்கிரஸ் எவ்வாறு களமிறங்கும் என்பதை விபரித்திருக்கின்றார்.
இதன் அடிப்படையில் பார்த்தால், ஆளும் ஐ.ம.சு.முன்னணியுடன் இணைந்து மு.கா. போட்டியிடுவதாயின் முதலமைச்சர் பதவியினை மு.காங்கிரஸ் கோரும். ஆனால், மு.கா.வுக்கு முதலமைச்சர் பதவி போய்ச் சேருவதை - அரசோடு இணைந்திருக்கும் அமைச்சர்களான அதாவுல்லா மற்றும் றிசாத் பதியுதீன் போன்றோர் விருப்பப்படமாட்டார்கள் என்றே தோன்றுகிறது. தமது விருப்பமின்மையை ஜனாதிபதிக்கும் கண்டிப்பாக தெரியப்படுத்துவார்கள்.
அரசாங்கத்தோடு இணைந்து தேர்தலில் களமிறங்க முடியாது போனால் - அடுத்து, தனது மரச் சின்னத்தில் தனித்துத்துப் போட்டியிடுவதென்கிற முடிவொன்றினையே மு.கா. எடுக்கும். தமிழ் - முஸ்லிம் உறவு குறித்து எவ்வளவுதான் நாம் வாய் கிழியப் பேசினாலும், தற்போதைய அரசியல் சூழ்நிலையில் இரண்டு சமூகங்களும் ஒன்றையொன்று குரோத மனதுடன்தான் பார்த்துக் கொண்டிருக்கின்றன என்பதே கசப்பான உண்மையாகும்! எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மு.கா. இணைந்து போட்டியிடுவதென்பது – 'சறுக்கு மரம்' ஏறுவதற்கு ஒப்பானதொரு விடயமாகும்!
அடுத்த சிக்கல், முதலமைச்சர் வேட்பாளரைத் தெரிவு செய்தலாகும். மு.கா.விலுள்ள பலருக்கு இப்போதே முதலமைச்சர் கனவுகள் வந்துபோகத் தொடங்கியுள்ளன. கிழக்கின் அடுத்த முதலமைச்சர் - தான்தான் என்கிற தொனியில் இப்போதே பலர் பேசத் தொடங்கியுள்ளனர். இதனால், முதலமைச்சர் வேட்பாளராக குறித்த ஒருவரைத் தெரிவு செய்து நிறுத்துவதில் மு.கா. தலைவர் பாரிய தலையிடிகளை முகம்கொள்வார். 'சரி, முதலமைச்சர் வேட்பாளராக என்னை நிறுத்தாது விட்டாலும் பரவாயில்லை ஆனால், 'குறித்த' நபருக்கு அந்த சந்தர்ப்பத்தினைக் கொடுக்கக் கூடாது' என்கின்ற வகையறாக்கள் இன்னொரு புறம் முனகுவார்கள். இதனால் - நிலைமை இன்னும் மோசமாகும். 46 minute ago
5 hours ago
5 hours ago
alauththeen Friday, 25 May 2012 11:48 AM
நல்லதோர் ஆய்வுக் கட்டுரை. பாராட்டுக்கள் மப்ரூக்.
Reply : 0 0
haroon Saturday, 26 May 2012 12:19 AM
நல்ல கட்டுரை நன்பா பாராட்டு
Reply : 0 0
Mohammed Hiraz Saturday, 26 May 2012 03:08 AM
பிள்ளையனுக்கு முதல் அமைச்சர் பதவி கொடுத்தது ஒருவகையில் நியாயமானது என்ற கூற்றை ஏன் இற்றைக்கு 4 வருடங்கள் முன்னர் காரணங்களுடன் எழுதவில்லை??? முதல் அமைச்சர் கிடைக்கிறதோ இல்லையோ குறைந்தது கிழக்கில் பெரும்பான்மையாக இருக்கும் முஸ்லிம்களின் அடையாளமாவது கிழக்கு மாகாண கொடியில் இடம்பெறுவதற்கான நியாயங்களை அடுக்காக எடுத்துரைத்து கட்டுரை எழுதுவதும் உரிய இடங்களுக்கு இது குறித்து எத்திவைப்பதும் உங்களைபோன்ற ஊடகவியலாளரின் கடமை.
Reply : 0 0
ooraan Saturday, 26 May 2012 05:56 AM
தற்காலத்துக்குப் பொருத்தமான ஒரு ஆய்வுக்கட்டுரை. மிகவும் அருமை வாழ்த்துக்கள் மப்ருக் .. சிராஷ் உங்களுடைய கருத்து எங்களை சிந்திக்க வைத்து இருக்கின்றது.
Reply : 0 0
riyas Sunday, 27 May 2012 06:45 AM
நல்ல விடயம்
Reply : 0 0
pottuvilan Sunday, 27 May 2012 07:46 AM
சலுகைகளுக்காகவும் உதவிகளுக்காகவும் தமது உரிமையையும் தனித்துவத்தையும் விலை பேசும் சமுதாயத்தில் கட்டிடங்கள் தான் அபிவிருத்தி என்பது நமது அரசியல் மந்திரம்.
Reply : 0 0
THUVARAKAN KURUVUR Sunday, 27 May 2012 09:58 AM
இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர் முதலமைச்சராக வருவது நிச்சயம்......
Reply : 0 0
vaasahan Monday, 28 May 2012 10:13 AM
நல்ல படிமுறையாக எழுதப்பட்டுள்ளது. மு.கா. தலைமை பற்றிய உதாரணம் கொஞ்சம் கூடிப்போச்சு என்று இன்னொரு நாளில் யோசிப்பிங்க.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
5 hours ago
5 hours ago