A.P.Mathan / 2012 மே 28 , பி.ப. 01:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
'வைத்தால் குடுமி, இல்லையென்றால் மொட்டை'. இதனையே முன்னாள் மக்களவை தலைவர் சங்மாவை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னிறுத்தி - தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா செய்துவரும் அரசியல் வெளிப்படுத்துகிறது. தப்பித்தவறி சங்மா ஜனாதிபதி ஆகிவிட்டால் அதற்கு ஜெயலலிதாவின் அரசியல் திறமையே காரணம் என்று அவரது அஇஅதிமுக கட்சி பிரசாரம் செய்யலாம். அந்த முயற்சி ஏதாவது விதத்தில் தோல்வி அடைந்தாலும், இதுவரை நாட்டின் சரித்திரத்தில் இல்லாதவகையில் கிறித்தவ சமூகத்தை சேர்ந்த ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தினார் என்று கூறி, மாநிலத்தில் உள்ள அந்த சமுதாய வாக்காளர்களின் ஒருமித்த ஆதரவை அஇஅதிமுக பெற முயற்சி செய்யலாம். அதிலும் குறிப்பாக, கூடம்குளம் பிரச்சினையில் அந்த மதத்தவர்களின் மனம் புண்படும் படியாக மாநில அரசு நடந்துகொண்டது என்ற எண்ணத்தையும் துடைத்துவிட ஜனாதிபதி தேர்தல் அஇஅதிமுக தலைமைக்கு ஒரு வாய்ப்பாக அமைந்ததாக எண்ணி, தமிழ் நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் மருகலாம். 6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago