2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கொல்லாமல் கொல்லும் எயிட்ஸ்

Menaka Mookandi   / 2014 டிசெம்பர் 01 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-போ.சோபிகா

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் முதலாம் திகதி உலக எயிட்ஸ் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், எந்த நோக்கத்தைக் கொண்டு உலக எயிட்ஸ் தினம் அனுஷ்டிக்க ஆரம்பிக்கப்பட்டதோ அதனை மறந்து வெறுமனே சடங்குக்காக மாத்திரம் தற்போது அனுஷ்டிக்கப்பட்டு வருகிறதா என்று எண்ணத்தோன்றுகிறது.


உலக அரங்கில் எயிட்ஸ் நோயை இல்லாது ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் உலக எயிட்ஸ் தினம் அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்று இது ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், தற்போது இந்த நோயின் தாக்கம் அதிகரித்துக்கொண்டு செல்வது மிகவும் வேதனைக்குரிய விடயம் ஆகும்.

உலகில் ரீதியில், பல நாடுகள் எதிர்கொண்டி பயங்கரமான நோய்கள் காரணமாக மக்கள் கூட்டம் கூட்டமாக உயிரிழந்த வரலாறுகள் உள்ளன. அவ்வாறான நோய்களைக் கண்டு மக்கள் பயந்து நடுங்கிய காலமும் உண்டு. ஆனால், இன்று அவ்வாறான நோய்கள் சர்வ சாதாரண நோய்களாகிவிட்டன. காரணம், வளர்ந்துவரும் மனித அறிவு விருத்தி காரணமாக அன்று பயங்கரமாகக் கணிக்கப்பட்ட நோய்களுக்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை கட்டுப்பட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

ஆனால், இன்றைய காலத்தில் பயங்கரமான... இல்லை, இல்லை... அதிபயங்கரமான நோயாக உருவெடுத்துள்ள எயிட்ஸ். இதை மாபெரும் பேரழிவு ஆயுதம் என்றே சொல்ல வேண்டும்.  இந்த நோய்க்கும் மருந்து இருக்கிறது என்று ஒரு தரப்பும் இல்லை என்று மற்றொரு தரப்பும் கூறிவருகின்ற போதிலும், இந்த நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை என்னவோ நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது என்பதே உண்மை.

யாழ். மாவட்டத்தில் தற்போது 13பேர்  எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என இனங்காணப்பட்டுள்ளார்கள். இது கடந்த வருடங்களை விட திடீரென ஏற்பட்டுள்ள அதிகரிப்பு. 'யாருக்கோ வந்திருக்கிறது, அவர்கள் எக்கேடு கெட்டால் என்ன, நமக்கா வந்திருக்கிறது' என்று அலட்சியமாக இருப்பது ஆபத்தானது. உலக மக்கள் தொகையில் இதுவரை சுமார் மூன்று கோடி உயிர்களை காவுகொண்டுள்ளது. ஏழு கோடி பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

இது மருத்துவ ஆராய்ச்சிக்கு உட்பட்ட புள்ளிவிவரமே தவிர, மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படாதவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்தால் இதை விட மூன்று மடங்காக இருக்கும் என்றும் மருத்துவ உலகத்தினர் சொல்கிறார்கள். அத்துடன், உலகில் நாளொன்றுக்கு எச்.ஐ.வி தொற்றால் சராசரியாக எட்டாயிரம் பேர் உயிரிழக்கிறார்கள். அதாவது நிமிடத்துக்கு 5பேர் உயிரிழக்கிறார்கள் என்பதையே புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

அந்த வகையில், இன்று எயிட்ஸ் தாக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் எமது நாடும் இருப்பது மிகப்பெரிய சோகம். அதிலும், யாழ். மாவட்டத்தில் தற்போது எயிட்ஸ் நோயின் தாக்கம் அதிகரித்துக்கொண்டு செல்கின்றது என்பது வருந்தத்தக்க விடயமே. உலகில் எந்த மூலையில் நோய்த் தாக்கம் ஏற்பட்டாலும், அது தன்னையும் தாக்கும் என்று புரிந்து கொள்கிறவன் தான் மனிதன். எயிட்ஸ் குறித்தும் நமக்கு விழிப்புணர்வு நிச்சயம் வேண்டும். அதை புரிந்து செயற்படவும் பழகிக்கொள்ள வேண்டும்.

யாழ். மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களில் எயிட்ஸ் நோய் தாக்கம் உடையவர்கள் இனங்காணப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 30 தொடக்கம் 40 வயதிற்கு உட்பட்டவர்களே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தென்னிலங்கையில் 55.8 வீதமானவர்களும் யாழ். மாவட்டத்தில் 3.5 வீதமானவர்களும் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கூடுதலாக பாதுகாப்பற்ற உடலுறவின் காரணமாகதான் இந்த நோய் தொற்று அதிகளவில் ஏற்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு தனிமனித வக்கிரமே காரணம். தனி மனிதர்களது காமப்போக்கே இந்த நோயைப் பரப்பியும் பெருக்கியும் வருகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக விழிப்புணர்வும் பாதுகாக்க வேண்டியதும் குணப்படுத்த வேண்டியதும் அரசினாலோ சில நிறுவனங்களாலோ மட்டும் முடிகின்ற செயல் அல்ல. இந்த நோயை முற்றிலுமாக ஒழிக்கும் ஆற்றல் ஒவ்வொரு தனி மனிதனின் ஒழுக்கத்திலும்தான் இருக்கிறது.


எயிட்ஸ் (AIDS) என்றால் என்ன ?

Acquired Immune Deficiency Syndrome

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X