2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மனத்தடையை துடைத்தெறிவோம்

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 03 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ப. பிறின்சியா டிக்சி


அரிது, அரிது மானிடராய் பிறத்தல் அரிது கூன், குருடு ,செவிடு நீங்கி பிறத்தல் அதைவிட அரிது என்பர். இவற்றையெல்லாம் மதிவிஞ்சும் முன்னர் விதி விளையாடிவிடும் சந்தர்ப்பங்கள் ஏராளம். அந்த அலைகளுக்குள் சிக்கி மீண்டோர் பலர். அவர்களுக்கான நாளாகவே சர்வதேச மாற்றுத்திறனாளி தினம் ஒவ்வொரு வருடமும் அனுஷ்டிக்கப்படுகின்றது.

1981ஆம் ஆண்டை உலக மாற்றுத்திறனாளிகள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. 1982ஆம் ஆண்டு டிசெம்பர் 3ஆம் திகதியை சர்வதேச மாற்றுத்திறானாளிகள் நாளாக அறிவித்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள், உலக நாடுகளால் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாள் எனக் கொண்டாடப்படுகின்றது.

மாற்றுத்திறனாளி என்பவர்கள் மற்றையவர்களுடன் ஒப்பிடும்போது, உடல் அல்லது உள ரீதியில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக, அவரால் சில செயல்களை செய்யமுடியாமல் போய்விடுகிற காரணத்தினால் அவரை நாம் 'மாற்றுத்திறனாளி' அல்லது 'விசேடதேவையுடையவர்' என்று அழைக்கின்றோம். இது, உடற் குறைபாடு, புலன் குறைபாடு, அறிதிறன் அல்லது அறிவுத்திறன் குறைபாடு, உளவியல் குறைபாடு, பிறநோய்கள் தொடர்பான குறைபாடு என்பவை தொடர்புடையதாக இருக்கலாம்.

முன்னர் குருடர்கள், செவிடர்கள், கை, கால் இழந்தவர்கள், அங்கவீனமானவர்கள் என பல வன்மையான சொற்பிரயோகங்களுடன் மாற்றுத்திறனாளிகள் அழைக்கப்பட்டனர். எனினும், இன்று அவர்களை இயலாதவர்கள் என்று முத்திரை குத்தி ஒதுக்கும் சமூகத்தினருக்கு இவர்கள் குறித்து கவனம் செலுத்தி கௌரவப்படுத்தவேண்டிய தேவை உணர்த்தப்படுகின்றது. எனவே, சர்வதேச ரீதியில் விசேடதேவையுடையவர்கள் குறித்த பல விழிப்புணர்வுத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

'மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை கருணை அடிப்படையில் பார்க்காது, உரிமைகளின் அடிப்படையில் பார்க்கவேண்டும் என்பதும், அவர்களுக்கு எதிரான பாரபட்சங்களுக்கு முடிவுகட்டவேண்டும்' என்பதும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசன விதிகளாகும்.
ஊனம் ஒருவருடைய பிறப்பில் அல்லது வாழ்க்கைக் காலத்தில் ஏற்படலாம். பிறப்பில் என்று குறிப்பிடும்போது மரபணுவினால் ஏற்படும் மாற்றங்களின் காரணமாகவும் தாயின் கருவில் இருக்கும்போது அல்லது குழந்தை பிறந்தவுடன் ஏற்படும் தெரியாத நோய்களின் மூலம் விசேட தேவையுடையோர்கள் உருவாகின்றனர். உள ரீதியான குறைபாட்டின் கீழ் மன இறுக்கம், அதிதுடிப்பாட்டம், மனநலிவு நோய், பெருமூளைவாதம் மற்றும் மெதுவாக கற்போர் போன்ற பல நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள்.

இந்நோய்களுக்குரியவர்களை பின்வருமாறு விளக்கிக் கூறலாம்.

மன இறுக்கம் (Autism) - இவர்கள் எப்போதும் அவர்களுக்கென்று தனி உலகத்தில் இருப்பார்கள். எப்போதும் சிந்தனைகள் ஒரே நோக்கத்தோடு இருக்கும்.

அதி துடிப்பாட்டம் (Hyper activeness)

You May Also Like

  Comments - 0

  • satha Rajanayagam Tuesday, 17 March 2015 08:39 AM

    Excellent article with good caption . I am sure your article will be an eye opener for others. Keep it up Dixi.Keep writing.

    Reply : 0       0

    satha Rajanayagam Tuesday, 17 March 2015 08:40 AM

    Excellent article with good caption . I am sure your article will be an eye opener for others. Keep it up Dixi.Keep writing.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X