Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஜூன் 15 , மு.ப. 07:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 274 ஆக உயர்ந்துள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த வியாழக்கிழமை லண்டனுக்கு புறப்பட்ட போயிங் விமானம் சில நிமிடங்களில் அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விழுந்து வெடித்து விபத்துக்குள்ளானது.
இந்த பயங்கர விபத்தில் விஸ்வாஸ் குமார் ரமேஷ் என்ற பயணி தவிர விமானத்தில் இருந்து 241 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் விமானம் வெடித்து சிதறியதால் பிஜே அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மிகப்பெரிய அளவில் சேதம் ஏற்பட்டது.
பிஜே மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மருத்துவப் படிப்பு மாணவர்கள் உட்பட ஏராளமானவர்கள் இந்த கோர விபத்தில் சிக்கிக் கொண்டனர். அவர்களில் 33 பேர் உயிரிழந்தனர் என தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 274 ஆக உயர்ந்துள்ளது.
இறந்த 33 பேரில் பெரும்பாலானவர்கள் பிஜே மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மருத்துவப் படிப்பு மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் என்று தெரியவந்துள்ளது.
இதற்கிடையே அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஊழியர்களில் சிலரை கடந்த 2 நாட்களாக காணவில்லை. அவர்கள் குறித்த தகவல்களையும் பொலிஸார் சேகரித்து வருகின்றனர். அவர்களும் விமான விபத்தில் உயிரிழந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனால் விமான விபத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. (a)
6 minute ago
21 minute ago
36 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
21 minute ago
36 minute ago
54 minute ago