2025 நவம்பர் 05, புதன்கிழமை

அகமதாபாத் விமான விபத்து: முன்கூட்டியே கணித்த பயணி

Editorial   / 2025 ஜூன் 18 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

லண்டனில் வசிக்கும் தனது இரண்டு கர்ப்பிணி மருமகள்களைப் பார்ப்பதற்காக   யாஸ்மின் லண்டனுக்குப் பயணம் செய்துள்ளார். இதற்காக பரோடாவைச் சேர்ந்த யாஸ்மின், தனது குடும்பத்துடன் ஏர் இந்தியா விமானம் AI171 இல் ஏறியுள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பயணிகளுடன் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. இந்த விமான விபத்தில் சுமார் 241 பேர் உயிரிழந்தனர். இந்த விமானத்தில் பயணித்த ஒருவர் மட்டுமே காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்து நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

இந்த நிலையில், விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தில் பரோடாவைச் சேர்ந்த 51 வயதான யாஸ்மின் வோரா, அவரது மருமகன் பர்வேஸ் வோரா மற்றும் அவரின் 4 வயது மகள் ஜுவேரியா ஆகியோர் பயணித்துள்ளனர்.

 

அறிக்கையின்படி, யாஸ்மின் லண்டனில் வசிக்கும் தனது இரண்டு கர்ப்பிணி மருமகள்களைப் பார்ப்பதற்காக லண்டனுக்குப் பயணம் செய்துள்ளார். இதற்காக பரோடாவைச் சேர்ந்த யாஸ்மின், தனது குடும்பத்துடன் ஏர் இந்தியா விமானம் AI171 இல் ஏறியுள்ளார்.

 

முன்னதாக, மனைவி யாஸ்மினை அவரது கணவர் விமான நிலையத்தில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளார். பின்னர், யாஸ்மின் தனது கணவரை தொலைபேசியில் அழைத்து கூறியதை கேட்டால் நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள்.

 

விமானம் புறப்படுவதற்கு சற்று நேரத்திற்கு முன்பு, யாஸ்மின் தனது கணவரை தொலைபேசியில் அழைத்து, விமானத்தில் ஏசி வேலை செய்யவில்லை என்றும், விமானத்தில் ஏதோ சரியில்லை என்றும் கூறியுள்ளார். இதற்கு யாஸ்மினின் கணவரோ, சிறிது நேரத்தில் ஏசியை இயக்கிவிடுவார்கள் எனக் கூறியுள்ளார்.

லண்டனில் உள்ள தனது இரண்டு கர்ப்பிணி மருமகள்களை பார்க்க ஜூன் 9ஆம் திகதியே லண்டனுக்குச் செல்ல யாஸ்மின் திட்டமிட்டுள்ளார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, ஜூன் 12ஆம் திகதிக்கு இந்த திட்டம் மாறியுள்ளது. ஜூன் 9ஆம் திகதி யாஸ்மின் லண்டனுக்கு சென்றிருந்தால், இந்த விபத்தில் இருந்து அவர் தப்பியிருப்பார்.

இந்த நிலையில் தான், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுமார் 241 பேர் உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக ஒருவர் மட்டுமே காயங்களுடன் உயிர் தப்பினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X