Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2025 ஜூன் 24 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா சபேஷ்
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரும் அணையா விளக்கு போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு ஓந்தாச்சிமடம் பாலத்தில் தீப்பந்தம் ஏந்திய போராட்டம் திங்கட்கிழமை (23) மாலை 06.00 மணி அளவில் நடைபெற்றது.
தமிழ் மக்கள் பலரது உடலங்களை தாங்கிய மனிதப் புதைகுழிகள் தமிழர் தாயகமெங்கும் அதிகரித்து செல்கின்றன தீர்வுகள் எதுவும் இதுவரை கிடைக்காத நிலையில் குறித்த விடயத்தை சர்வதேச பார்வைக்கு கொண்டு செல்வதோடு அதனூடாக உறவுகளுக்கு நீதி கிடைக்க வலியுறுத்தும் வகையில் மக்கள் இந்த 'அணையா விளக்கு' போராட்டத்தை திங்கட்கிழமை (23)காலை 10.10 மணி அளவில் யாழ்ப்பாணம் செம்மணியில் 1996 களில் சருகாகிப் போன கிருசாந்தியின் உறவினரால் சுடரேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற அணையா விளக்கு போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன், மாநகர சபை மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், கட்சியின் உறுப்பினர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அணையா விளக்கு போரபட்டத்தில் பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் பேரணியாக நடந்து சென்று பின்னர் பாலத்தின் நடுப்பகுதியில் தீப்பந்தங்களை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் ஆணையாளர் இலங்கைக்கு வருகின்ற போது இடையில் இடம்பெற்ற இவ்வாறான மனித புதைகுழிகள், இனப்படுபவர்களுக்கு சர்வதேச பொறிமுறையின் ஊடாக நீதியினை பெற்று தர வேண்டும் என இதன் போது வலியுறுத்தப்பட்டது..
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago