Editorial / 2021 மார்ச் 10 , மு.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகேஸ்வரி விஜயனந்தன்
கொழும்புத் துறைமுகத்தின் மேற்கு முனையத்துக்கான முதலீட்டு நிறுவனத்தை, இந்தியா பரிந்துரைக்காமையால், கிழக்கு முனையத்துக்காகப் பரிந்துரைக்கப்பட்ட அதானி நிறுவனத்துடன், இலங்கை அரசாங்கம் நேரடியாகக் கலந்துரையாடியதாகத் தெரிவித்த அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான உதய கம்மன்பில, கலந்துரையாடல் தொடர்கிறது என்றார்.
“மேற்கு முனையத்தின் கூட்டு அபிவிருத்தி தொடர்பான தீர்மானங்களுக்கு உத்தியோகபூர்வமாகத் தலையீடு செய்ய மாட்டோமென இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளதால், அதானி நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் கலந்துரையாடலில் ஈடுபட்டு வருகிறது” என்றார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (9) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், “கிழக்கு முனையத்தில் முதலீடு செய்வதற்காக இந்திய அரசாங்கம் அதானி நிறுவனத்தைப் பெயரிட்டது. இந்நிலையில், இலங்கைத் துறைமுக அதிகார சபையின் தலையீட்டால், கிழக்கு முனையத்தை வழங்காதிருக்க அரசாங்கம் கொள்கை ரீதியாகத் தீர்மானித்ததன் பலனாகவே, மேற்கு முனையத்தை அதானி, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் ஒன்றிணைந்த செயற்றிட்டமாக முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்தது” என்றார்.
குறித்த கிழக்கு முனைய விவகாரத்தில், அதானி நிறுவனத்தை மாத்திரமே இந்தியா பரிந்துரைத்தது என்பதுடன் மேற்கு முனையத்துக்காக இந்தியாவோ ஜப்பானோ இதுவரை எந்த நிறுவனங்களையும் பரிந்துரைக்கவில்லை எனத் தெரிவித்த அவர், ஆகையால், அந்த நிறுவனத்துடன் மாத்திரமே நாங்கள் கலந்துரையாடி வருகிறோம் என்றார்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago