2025 ஜூலை 05, சனிக்கிழமை

’அதிகாரிகளின் எண்ணிக்கை குறைவால் விசாரணைகள் தாமதமடைகின்றன’

Editorial   / 2018 டிசெம்பர் 10 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதுமானளவு விசாரணை அதிகாரிகள் இன்மையால் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய   விசாரணைகளை முன்னெடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான  ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஊழல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க 5 பிரிவுகள் காணப்படும் நிலையில், இங்கு ஒரு பிரிவில் 20 அதிகாரிகளே கடமையாற்றுவதாகவும் குறித்த ஒவ்வொரு பிரிவுகளுக்கு சுமார் 700- 800 வரையான விசாரணை கோவைகள் கிடைக்கப்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது குறித்த விசாரணை ஆணைக்குழுவில் 200 அதிகாரிகளே கடமையாற்றுவதுடன், இலங்கையின் சனத்தொகையுடன் ஒப்பிடுகையில் இதன் விசாரணை அதிகாரிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்று தெரிவித்துள்ள இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான  ஆணைக்குழு 6 மில்லியன் மக்கள் வாழும் ஹொங்ஹொங் நாட்டில் இலஞ்சம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க 1000இக்கும் அதிகமான அதிகாரிகள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2017, 2018ஆம் ஆகிய இரண்டு வருடங்களுக்குள்  இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான 62 வழக்குகளின் பிரதிவாதிகளே குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் இந்த வருடத்துக்குள் 48 பேர் இலஞ்சம் பெற முயற்சித்த போது கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் கடந்தாண்டு கிடைக்கப்பெற்ற 2768 முறைபாடுகளில் 1652 விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த வருடத்தின் கடந்த நவம்பர் மாதம் இறுதி வரை 3081 முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன் இதில் 1863 முறைபாடுகளை மேலதிக விசாரணை செய்ய தீர்மானித்துள்ளதாகவும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான  ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .