Editorial / 2019 செப்டெம்பர் 07 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
கம்பொலயிலிருந்து அக்கரப்பத்தனை நோக்கி பயணம் செய்த ஓட்டோவொன்று 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த நால்வர் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று இன்று (07) இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தானது, நாவலப்பிட்டிய – தலவாக்கலை பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து ஏற்படுவதற்கு, அதிவேகமாக ஓட்டோவை செலுத்திச் சென்றமை, சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கம் ஆகியவையே காரணங்களெனப் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன் காயங்களுக்குள்ளான நால்வரும் நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 hours ago
9 hours ago
9 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
9 hours ago
02 May 2026