2025 மே 21, புதன்கிழமை

‘அதுக்கு’ புறா ஒருவர் கைது

Editorial   / 2017 செப்டெம்பர் 07 , மு.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

புறாக்களைப் பயன்படுத்தி, போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில், அம்பலாந்தொட்டை, மெலேகொலனிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  

சந்தேகநபர், ஹெரோய்ன் போதைப்பொருள் அடங்கிய பக்கெட்டுகளை, புறாக்களின் சிறகுகள் மற்றும் கால்களில் மிகவும் சூட்சுமமாக மறைத்து வைத்தே, இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார் என்று, விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து ஹெரோய்ன் போதைப்பொருள் அடங்கிய ஆறு பக்கெட்டுகள் மற்றும் புறாக்கள் ஜோடியையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.  

சந்தேகநபரை, புறாக்களுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .