2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்பு

George   / 2016 டிசெம்பர் 31 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நடராஜன் இன்று சனிக்கிழமை பதவியேற்றார்.  

நேற்று முன்தினம் அதிமுக பொதுக்குழு நடைபெற்றது. அப்பொதுக்குழுவில் சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். இதனை சசிகலாவும் ஏற்றுக் கொண்டார்.

இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலராக சசிகலா பதவியேற்றார். இதற்காக ஜெயலலிதா பயன்படுத்திய காரிலேயே சசிகலா வந்தார்.

தம்மை ஒரு ஜெயலலிதாவாக உருவத்திலும் செயலிலும் காட்டிக் கொள்ளும் செயற்கைத்தனத்தை சசிகலாவிடம் பார்க்க முடிந்தது. அதிமுக தலைமை அலுவலகத்தில் குறைவாகவே தொண்டர்கள் கூட்டம் இருந்தது. அவர்களிடத்திலும் பெரிய அளவிலான உற்சாகம் கரைபுரண்டோடவில்லை.

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சசிகலா வந்த அதே நேரத்தில் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக தொண்டர் சுவாதி ஆனந்த் என்பவர் ஜெயலலிதா நினைவிடத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .