Janu / 2026 மார்ச் 16 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெண்ணின் அந்தரங்க வீடியோவை (Nude Video) சமூக வலைத்தளமான வாட்ஸ் அப் (WhatsApp) ஊடாக பகிர்ந்தமை மற்றும் அதனைத் தம்வசம் வைத்திருந்தமை தொடர்பாக இரு மாணவர்கள் திங்கட்கிழமை (16) அன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பலாங்கொடை, திலகபுர பகுதியில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் (CID) சைபர் குற்ற புலனாய்வு பிரிவினரால் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களால் சைபர் குற்ற புலனாய்வு பிரிவில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு இணங்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் இருவரும் 21 வயதுடைய அம்பலாங்கொடை, திலகபுர பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அதில் ஒருவர் தனியார் பல்கலைக்கழகமொன்றில் மென்பொருள் பொறியியல் (Software Engineering) பீடத்தில் பயின்று வருபவர் என்பதுடன் மற்றையவர் ஒருகொடவத்தையிலுள்ள தொழில்நுட்ப கல்லூரியொன்றில் மோட்டார் வாகன பொறியியல் (Automobile Engineering) பாடநெறியை பயின்று வருபவர் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
6 minute ago
21 minute ago
25 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
21 minute ago
25 minute ago
26 minute ago