Janu / 2026 பெப்ரவரி 08 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய அந்தூரியம் (Anthurium) செடிகளுடன், இலங்கை பெண் பயணிகள் இருவர் சனிக்கிழமை (07) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள், பல்லுயிர், கலாசார மற்றும் தேசிய மரபுரிமைகள் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் மற்றும் விமான நிலைய சுங்க அதிகாரிகள் இணைந்து இந்தச் சோதனையை முன்னெடுத்திருந்தனர்.
கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவர் கொழும்பு பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய எனவும், மற்றையவர் அவிசாவளை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் எனவும் தெரியவருகிறது.
இரு பெண்களும் சனிக்கிழமை (07) அதிகாலை 12.35 மணியளவில் தாய்லாந்தின் பெங்கொக் நகரில் இருந்து தாய் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான TG-307 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
குறித்த பெண்களின் பயணப் பொதிகளை சோதனையிட்ட போது 436 அன்தூரியம் செடிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது. இதற்காக விவசாயத் திணைக்களத்தின் இறக்குமதி அனுமதிப்பத்திரம் எதுவும் பெறப்பட்டிருக்கவில்லை என்பதுடன், இலங்கையின் வனவிலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்புச் சட்டம் மற்றும் தாவரங்கள் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறிய வகையில் இந்த செடிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் குறித்த இரு பெண்களையும் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
டி.கே.ஜி.கபில

43 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
53 minute ago
1 hours ago