2021 ஜூன் 14, திங்கட்கிழமை

அநுராதபுரத்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்

J.A. George   / 2021 மே 06 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரத்தில் புதிய பஸ் தரிப்பிடத்திலுள்ள சம்பத் வங்கியின் கிளையிலிருக்கும் தன்னியக்க இயந்திரத்தில் (ஏ.டி.எம்) வைப்பிலிடுவதற்காக கொண்டுவரப்பட்ட பணத்தை, கொள்ளையிடுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது.

கொள்ளையடிப்பதற்கு வந்த, இருவரையும் நோக்கி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தினால், அப்பணத்தை காப்பாற்றிக்கொள்ள முடிந்ததென அறியமுடிகின்றது.

அந்த வங்கியின் தன்னியக்க இயந்திரத்தில் பணத்தை வைப்பிலிடுவதற்கு இன்றுக்காலை  தயாரானபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், பணத்தை வைப்பிலிட வந்த இருவரின் முகங்களில்   மிளகாய்தூளை வீதியெறிந்து பணத்தை கொள்ளையிடுவதற்கு முயற்சித்துள்ளனர்.

அதிலொரு கொள்ளையர், பாதுகாப்பு கடமையில் இருந்தவரிடமிருந்த துப்பாக்கியை அபகரிக்க முயற்சித்துள்ளார். அதன்போது, துப்பாக்கி இயங்கியதில், பாதுகாப்பு ஊழியர் காயமடைந்துள்ளார்.

இந்நிலையில், பணத்தை வைப்பிலிடுவதற்கு வருகைதந்தவர்கள் வந்த வானின் சாரதி, துப்பாக்கியை அபகரித்து, துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

எனினும், துப்பாக்கி பிரயோகத்திலிருந்து, கொள்ளையர்கள் இருவரும் தப்பியோடிவிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பில், அநுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .