2026 மே 02, சனிக்கிழமை

அனுமதிப்பத்திரமின்றி தொழிலில் ஈடுபட்ட நால்வர் கைது

Editorial   / 2019 செப்டெம்பர் 10 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் – பேசாலை கடற்பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட மீனவர் நால்வர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (09) கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டிருந்த கண்காணிப்பு நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் 20 தொடக்கம் 34 வயதுகளையுடையவர்களென்றும், மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்திய இயந்திரப்படகும் கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .