2025 மே 21, புதன்கிழமை

அனுராதபுர நகரத்தின் CCTV கெமராக்களுக்கு நடந்தது என்ன?

Freelancer   / 2025 மார்ச் 14 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனுராதபுரம் நகரத்தின் பாதுகாப்புக்காக 47 CCTV கெமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், அவை அனைத்தும் தற்போது செயலிழந்துள்ளதாக பிரதேச மக்களும் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். 

இதன் காரணமாக நகரில் இடம்பெறும் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலைக் கண்டறியும் வாய்ப்பும் இழக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

2017 ஆம் ஆண்டில் அனுராதபுரம், ஹபரணை மற்றும் பொலன்னறுவை ஆகிய நகரங்களின் பாதுகாப்பிற்காக 7 மில்லியன் ரூபா செலவில் 47 CCTV  கெமராக்களை நிறுவ வடமத்திய மாகாணசபை நடவடிக்கை எடுத்திருந்தது. அவற்றில் எதுவும் தற்போது செயல்படவில்லை. 

CCTV அமைப்பை நிறுவிய தனியார் நிறுவனத்துடனான சேவை ஒப்பந்தம் ஏப்ரல் 2024ஆம் ஆண்டுடன் நிறைவடைந்தமையே இதற்கு காரணமாகும். 

அனுராதபுரம் நகரம் சுற்றுலாப் பயணிகளால் தொடர்ந்து பார்வையிடப்படும் நகரமாக இருப்பதால், அதன் பாதுகாப்பை உறுதி செய்வது அதிகாரிகளின் பொறுப்பாகும். 

இருப்பினும், CCTV கெமரா அமைப்பின் செயலிழப்பானது அனுராதபுரம் நகரின் பாதுகாப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள், சட்டத்தரணிகள் மற்றும் அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X