2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

அபிவிருத்தி சட்டமூலம் திரும்ப வரும்

George   / 2016 டிசெம்பர் 28 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

அபிவிருத்தி(விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம், ஒரு வாரத்தில்  சகல மாகாண சபைகளிலும் மீண்டும் கொண்டு வந்து, அதனை நிறைவேற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தற்போது கொண்டுவரப்பட்ட அபிவிருத்தி(விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் ஊடாக சுப்பிரி அமைச்சர் ஒருவர் உருவாக்கப்படுவார் என்றும், மகாண சபைகள் சவாலுக்கு முகங்கொடுக்க ​நேரிடும் என்று கூறப்பட்டதால், மாகாண சபைகளில் இந்த சட்டமூலம் தோற்கடிக்கப்பட்டது.

அபிவிருத்தி(விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள், அமைச்சரவையில் ஒப்புக்கொண்ட நிலையில், இந்த சட்டமூலம் தோற்கடிக்கப்பட்ட மகாண சபைகளில்  மீண்டும் கொண்டுவந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .