2025 டிசெம்பர் 26, வெள்ளிக்கிழமை

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு: 6 பேர் கைது

Freelancer   / 2025 டிசெம்பர் 26 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பலாங்கொடை பிரதேசத்தில் கடந்த டிசம்பர் 22 ஆம் திகதி ஒருவரை சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பில் ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹிக்கடுவ பிரதேசத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, இவர்களில் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினராலும், ஏனைய நால்வர் காலி குற்றத்தடுப்புப் பிரிவினராலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் ஒரு ரிவோல்வர் ஆகிய துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X