2026 மே 02, சனிக்கிழமை

அமெரிக்க நிதியுதவியில் புதுப்பிக்கப்பட்ட அருங்காட்சியகம் திறப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 16 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா பி ரெப்லிட்ஸ்,  அநுராதபுராவில் உள்ள தொல்பொருள் அருங்காட்சியகத்தை அண்மையில் திறந்து வைத்தார்,

மூன்று அமெரிக்க மானியங்களின் கீழ் இந்த அருங்காட்சிகம் புதுப்பிக்கப்பட்டது.

இந்த அருங்காட்சியகமானது,  தொல்பொருள் ரீதியாக அரிதான பொருள்களைக் கொண்டுள்ளது.

இதில் "சிலைகள், வெண்கல சிலைகள், பண்டைய நாணயங்கள், உடைகள் மற்றும் பல்வேறு தொழில்களில் பயன்படுத்தப்படும் கருவிகள் மற்றும் பண்டைய நகரமான அநுராதபுரவின் மாதிரிகள் ஆகியவை அடங்கும்" என்று அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

கலாசார பாதுகாப்புக்கான அமெரிக்க வெளியுறவுத்துறை நிதியத்தின் ஊடாக 2015 ஆம் ஆண்டில் 150,000 அமெரிக்க டொலர் வழங்கப்பட்டது.

மேலும்,  2009 ஆம் ஆண்டில் 30,000 அமெரிக்க டொலர் மானியம் வழங்கப்பட்டதுடன், 2012 ஆம் ஆண்டில் 40,120 அமெரிக்க டொலர் வழங்கப்பட்டதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .